இரத்மலானையில் 630 போதை மாத்திரைகளுடன் 33 வயது நபர் கைது!
இரத்மலானை பகுதியில் 630 போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (ஒக்டோபர் 18) மொரட்டுவை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை வீடமைப்புத் திட்டத்தில் அமைந்துள்ள வீடொன்றின் முன்னால் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 630 போதை மாத்திரைகளும், அவற்றை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் 8,700 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.