கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தில் ரூ. 6.75 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

arvloshan.com

கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, 6 கோடியே 75 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களை இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இன்று (19) இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட 11 சந்தேகத்திற்கிடமான சர்வதேச தபால் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து வரும் தபால் பொதிகளைக் கண்காணிக்கும் நடவடிக்கையின்போது, கடந்த சில மாதங்களாக இந்தப் பொதிகளைச் சுங்க அதிகாரிகள் அடையாளம் கண்டு தடுத்து வைத்திருந்தனர். அவற்றைப் பெற்றுக்கொள்ள உரிய காலப்பகுதிக்குள் எவரும் வருகை தராததைத் தொடர்ந்து, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் முன்னிலையில் பொதிகள் திறக்கப்பட்டு சோதனையிடப்பட்டன.

இதன்போது, தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிலிருந்து அனுப்பப்பட்ட 3.1 கிலோகிராமுக்கும் அதிகமான குஷ் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 3 கோடியே 5 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பெல்ஜியம், பிரான்ஸ், கனடா மற்றும் ஜேர்மனியிலிருந்து அனுப்பப்பட்ட 2,395 கிராம் எம்.டி.எம்.ஏ (MDMA) போதை மாத்திரைகளும், நெதர்லாந்திலிருந்து அனுப்பப்பட்ட 33 கிராம் எம்.டி.எம்.ஏ படிக அல்லது தூள் வடிவிலான போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்டவற்றில் அதிக பெறுமதியான போதைப்பொருள் பெல்ஜியத்திலிருந்து அனுப்பப்பட்ட பொதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அதில் 2,202 கிராம் எம்.டி.எம்.ஏ போதை மாத்திரைகள் காணப்பட்டதுடன், அவற்றின் பெறுமதி 3 கோடியே 30 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட சோதனைகளைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


ஏனைய செய்திகள்

arvoshan.com

டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். அலுவலகத்தில் பல மணி நேரம் CID சோதனை

...

arvoshan.com

அல்லைப்பிட்டியில் பேருந்து – முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

...

arvoshan.com

அகுரணை கோர விபத்து: பிரேக் செயலிழந்ததாக சாரதி கூறுவது குறித்து விசாரணை – பொலிஸார் புதிய தகவல்

...

arvoshan.com

நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது!

...

arvoshan.com

காட்டு யானை ‘கவன்திஸ்ஸ’ உயிரிழப்பு: விசாரணைக்கு நிபுணர் குழுவை நியமித்தார் ஜனாதிபதி

...

arvoshan.com

இரத்மலானையில் 630 போதை மாத்திரைகளுடன் 33 வயது நபர் கைது!

...

arvoshan.com

யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட நகைகளுடன் திஸ்ஸமஹாராமவில் 46 வயது நபர் கைது!

...

arvoshan.com

இலங்கையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு மணி நேர மின்வெட்டு – நேர அட்டவணை வெளியீடு

...

arvoshan.com

நாடளாவிய ரீதியில் மூன்று நாட்களுக்கு ஒரு மணிநேர மின்வெட்டு – அனுமதி கோரியது NSO

...

arvoshan.com

வென். கஸ்ஸப தேரர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு: வென். சுமங்கல தேரரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு

...

arvoshan.com

தாய்லாந்து துணைப் பிரதமருக்கு உரிய மரியாதை இல்லையா? அரசிடம் ஐ.தே.க. கேள்வி

...

arvoshan.com

ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தத்திற்கு சபாநாயகர் சான்றளிப்பு!

...

arvoshan.com

கொழும்பு துறைமுகத்தின் 280 மில்லியன் டொலர் சீன முதலீட்டுத் திட்டம் இரத்து!

...

arvoshan.com

கவன்­திஸ்ஸ யானையின் மரணம் மீண்டும் நிகழக்கூடாது – சுற்றுச்சூழல் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும்: பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

கொழும்பு பேரே ஏரியைப் புனரமைக்கும் திட்டம்: 120-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்பு

...