காட்டு யானை ‘கவன்திஸ்ஸ’ உயிரிழப்பு: விசாரணைக்கு நிபுணர் குழுவை நியமித்தார் ஜனாதிபதி

arvloshan.com

கல்கமுவ, சியம்பலங்கமுவ பகுதியில் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதியளவில் உயிரிழந்த ‘கவன்திஸ்ஸ’ என்ற காட்டு யானையின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார்.

குறித்த யானையின் உயிரிழப்புக்கான உடனடிக் காரணங்கள் மற்றும் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிதல், அதற்குச் சிகிச்சையளித்தபோது ஏதேனும் குறைபாடுகள் அல்லது அலட்சியங்கள் இடம்பெற்றனவா என்பதை ஆராய்தல் உள்ளிட்ட பொறுப்புகள் இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், காட்டு யானைகளின் நலனைப் பாதுகாப்பதற்கான நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை உருவாக்குதல் மற்றும் தேசிய யானைகள் பாதுகாப்புத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகளைத் தயாரித்தல் ஆகிய பணிகளையும் இக்குழு மேற்கொள்ளவுள்ளது.

முன்னாள் அமைச்சின் செயலாளர் ஏ.எச். சரத் விஜேசிங்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில், பேராசிரியர் டி. சமிந்த பெர்னாண்டோ, பேராசிரியர் ஏ.ஜி. அனில் புஷ்பகுமார, பேராசிரியர் யு.கே. கலிங்க பத்மலால், வைத்தியர் ஜகத் குணவர்தன மற்றும் சட்டத்தரணி சரக ஜயரத்ன ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் டபிள்யூ.டபிள்யூ. ஹரிசன் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயற்படுவார்.

மேலும், விசாரணைகளை விரிவுபடுத்தும் நோக்கில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும் இக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விரிவான விசாரணைகளை முன்னெடுத்து, தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை 30 நாட்களுக்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு நிபுணர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். அலுவலகத்தில் பல மணி நேரம் CID சோதனை

...

arvoshan.com

அல்லைப்பிட்டியில் பேருந்து – முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

...

arvoshan.com

அகுரணை கோர விபத்து: பிரேக் செயலிழந்ததாக சாரதி கூறுவது குறித்து விசாரணை – பொலிஸார் புதிய தகவல்

...

arvoshan.com

நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது!

...

arvoshan.com

கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தில் ரூ. 6.75 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

...

arvoshan.com

இரத்மலானையில் 630 போதை மாத்திரைகளுடன் 33 வயது நபர் கைது!

...

arvoshan.com

யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட நகைகளுடன் திஸ்ஸமஹாராமவில் 46 வயது நபர் கைது!

...

arvoshan.com

இலங்கையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு மணி நேர மின்வெட்டு – நேர அட்டவணை வெளியீடு

...

arvoshan.com

நாடளாவிய ரீதியில் மூன்று நாட்களுக்கு ஒரு மணிநேர மின்வெட்டு – அனுமதி கோரியது NSO

...

arvoshan.com

வென். கஸ்ஸப தேரர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு: வென். சுமங்கல தேரரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு

...

arvoshan.com

தாய்லாந்து துணைப் பிரதமருக்கு உரிய மரியாதை இல்லையா? அரசிடம் ஐ.தே.க. கேள்வி

...

arvoshan.com

ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தத்திற்கு சபாநாயகர் சான்றளிப்பு!

...

arvoshan.com

கொழும்பு துறைமுகத்தின் 280 மில்லியன் டொலர் சீன முதலீட்டுத் திட்டம் இரத்து!

...

arvoshan.com

கவன்­திஸ்ஸ யானையின் மரணம் மீண்டும் நிகழக்கூடாது – சுற்றுச்சூழல் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும்: பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

கொழும்பு பேரே ஏரியைப் புனரமைக்கும் திட்டம்: 120-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்பு

...