இலங்கையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு மணி நேர மின்வெட்டு – நேர அட்டவணை வெளியீடு
இலங்கை முழுவதும் இன்று (19) முதல் எதிர்வரும் புதன்கிழமை (21) வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நாளொன்றுக்கு ஒரு மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, நாடு நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு குழுவுக்கும் தினமும் மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
ஒக்டோபர் 19, 20 மற்றும் 21ஆம் திகதிகளுக்கான மின்வெட்டு நேர அட்டவணையை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இன்றைய (ஒக்டோபர் 19) மின்வெட்டு அட்டவணை:
- குழு 1: மாலை 4.30 – 5.30 மணி
- குழு 2: மாலை 5.30 – 6.30 மணி
- குழு 3: மாலை 6.30 – 7.30 மணி
- குழு 4: மாலை 7.30 – 8.30 மணி
நாளைய (ஒக்டோபர் 20) மின்வெட்டு அட்டவணை:
- குழு 4: மாலை 4.30 – 5.30 மணி
- குழு 1: மாலை 5.30 – 6.30 மணி
- குழு 2: மாலை 6.30 – 7.30 மணி
- குழு 3: மாலை 7.30 – 8.30 மணி
புதன்கிழமை (ஒக்டோபர் 21) மின்வெட்டு அட்டவணை:
- குழு 3: மாலை 4.30 – 5.30 மணி
- குழு 4: மாலை 5.30 – 6.30 மணி
- குழு 1: மாலை 6.30 – 7.30 மணி
- குழு 2: மாலை 7.30 – 8.30 மணி
லக்விஜய மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளதால், மின் உற்பத்தித் திறனில் ஏற்படும் பற்றாக்குறையைச் சமாளிக்கத் தேவையான சந்தர்ப்பங்களில், இலங்கை மின்சார சபை (CEB) மின்சாரத் தேவையை முகாமைத்துவம் செய்வதற்காக இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்சாரத் தேவை, கிடைக்கக்கூடிய மின் உற்பத்தித் திறன் மற்றும் நிலவும் வானிலை ஆகியவற்றைப் பொறுத்து, மின்வெட்டு ஆரம்பிக்கும் மற்றும் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நேரங்களில் 30 நிமிடங்கள் வரை மாற்றம் ஏற்படலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ஒக்டோபர் 19 முதல் 21 வரை ஒரு மணி நேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி கோரியுள்ளதாக தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் நிறுவனத்தின் (NSO) பிரதம நிறைவேற்று அதிகாரி புத்திக சமரசிங்க இன்று முன்னதாக அறிவித்திருந்தார்.