கவன்­திஸ்ஸ யானையின் மரணம் மீண்டும் நிகழக்கூடாது – சுற்றுச்சூழல் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும்: பிரதமர் ஹரிணி

arvloshan.com

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து உயிரிழந்த காட்டு யானையான கவன்­திஸ்ஸவின் மரணம் போன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் சுற்றுச்சூழல் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (19) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கும் விழாவில் உரையாற்றிய பிரதமர், கவன்­திஸ்ஸ யானையின் மரணம் அரசாங்கத்துக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

குறித்த யானையை உயிருடன் காப்பாற்ற வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட கடுமையான காயங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொற்றுகள் காரணமாக யானையைக் காப்பாற்ற முடியாமல் போனதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறான துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழ அனுமதிக்க முடியாது என வலியுறுத்திய பிரதமர், சுற்றுச்சூழல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அவர்களின் பதவி, செல்வம் அல்லது அரசியல் மற்றும் தனிப்பட்ட செல்வாக்குகளைப் பொருட்படுத்தாமல் சட்டம் சமமாக அமுல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும், இத்தகைய சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக வனவிலங்குகளுக்கான கால்நடை மருத்துவச் சேவைகளையும், கால்நடை மருத்துவக் கல்வியையும் மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மனித – யானை மோதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

மனித – யானை மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய பிரதமர், சுமார் 71,900 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட 113 வனப்பகுதிகள் பாதுகாப்புப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

யானைகளின் சுதந்திரமான நடமாட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் மூன்று யானை வழித்தடங்களை உருவாக்குவதற்கும், யானைகளின் முகாமைத்துவத்துக்கென தனியான பாதுகாப்புப் பகுதியை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் 100 பிக்கப் வாகனங்கள், 185 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒன்பது உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அத்துடன், யானை வேலிகளைப் பராமரிப்பதற்காக 3,500 யானை வேலி உதவியாளர்களும், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த 5,000 பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

26 ஆண்டுகளுக்குப் பின்னர் சுற்றுச்சூழல் சட்டத்தில் திருத்தம்

தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தில் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் இதன்போது அறிவித்தார்.

மேலும், சுற்றுச்சூழல் அமைச்சின் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் 1,600 இற்கும் மேற்பட்ட புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

நிலையான அபிவிருத்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கொள்கைகளில் மட்டுமன்றி, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

“சுற்றுச்சூழலை அழிப்பதன் மூலம் அடையப்படும் அபிவிருத்தியை ஒருபோதும் நிலையான அபிவிருத்தியாகக் கருத முடியாது” என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். அலுவலகத்தில் பல மணி நேரம் CID சோதனை

...

arvoshan.com

அல்லைப்பிட்டியில் பேருந்து – முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

...

arvoshan.com

அகுரணை கோர விபத்து: பிரேக் செயலிழந்ததாக சாரதி கூறுவது குறித்து விசாரணை – பொலிஸார் புதிய தகவல்

...

arvoshan.com

நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது!

...

arvoshan.com

காட்டு யானை ‘கவன்திஸ்ஸ’ உயிரிழப்பு: விசாரணைக்கு நிபுணர் குழுவை நியமித்தார் ஜனாதிபதி

...

arvoshan.com

கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தில் ரூ. 6.75 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

...

arvoshan.com

இரத்மலானையில் 630 போதை மாத்திரைகளுடன் 33 வயது நபர் கைது!

...

arvoshan.com

யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட நகைகளுடன் திஸ்ஸமஹாராமவில் 46 வயது நபர் கைது!

...

arvoshan.com

இலங்கையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு மணி நேர மின்வெட்டு – நேர அட்டவணை வெளியீடு

...

arvoshan.com

நாடளாவிய ரீதியில் மூன்று நாட்களுக்கு ஒரு மணிநேர மின்வெட்டு – அனுமதி கோரியது NSO

...

arvoshan.com

வென். கஸ்ஸப தேரர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு: வென். சுமங்கல தேரரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு

...

arvoshan.com

தாய்லாந்து துணைப் பிரதமருக்கு உரிய மரியாதை இல்லையா? அரசிடம் ஐ.தே.க. கேள்வி

...

arvoshan.com

ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தத்திற்கு சபாநாயகர் சான்றளிப்பு!

...

arvoshan.com

கொழும்பு துறைமுகத்தின் 280 மில்லியன் டொலர் சீன முதலீட்டுத் திட்டம் இரத்து!

...

arvoshan.com

கொழும்பு பேரே ஏரியைப் புனரமைக்கும் திட்டம்: 120-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்பு

...