தொழிற்கல்வியை வலுப்படுத்த ஆசிய - பசிபிக் அமைப்புடன் இலங்கை புதிய ஒப்பந்தம்

arvloshan.com

இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி, பயிற்சித்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், ஆசிய - பசிபிக் அங்கீகார மற்றும் சான்றளிப்பு ஆணைக்குழுவுடன் புதிதாக ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவிற்கும் பிலிப்பைன்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் ஆசிய - பசிபிக் அங்கீகார மற்றும் சான்றளிப்பு ஆணைக்குழுவிற்கும் இடையே, உள்நாட்டு தொழிற்கல்வித்துறையின் சான்றளிப்புத் தரங்களை உயர்த்தும் பொருட்டு முன்னர் ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.

எனினும், அந்த ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்துள்ளதை அடுத்து, இரு நிறுவனங்களுக்கும் இடையிலான கூட்டுறவை மேலும் தொடரவும் விரிவுபடுத்தவும் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

தொழிற்கல்வித்துறையில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கையின் தொழிற்கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த புதிய ஒப்பந்தம் அமையவுள்ளது.

அத்துடன், தொழிற்பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு சர்வதேச ரீதியிலான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதுடன், இலங்கையின் தேசிய தொழற்தகுதி சட்டகத்தை (NVQ) மேலும் வலுப்படுத்தவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இலங்கையில் அங்கீகாரப் பணிகளுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கும், ஆசிய - பசிபிக் அமைப்பின் வழிகாட்டல்களுக்கு அமைவாக எதிர்கால அங்கீகார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக உள்நாட்டு மதிப்பீட்டாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்குவதற்கும் இந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை தனது பூரண அனுமதியை வழங்கியுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

துறைமுக நகர விசா கண்காணிப்பில் குளறுபடி: பொது நிதிக் குழுவில் காரசார விவாதம்!

...

arvoshan.com

வடமேல் மாகாணத்தில் வனவிலங்கு சோதனையில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் மூவர் கைது; ஒருவர் தப்பியோட்டம்

...

arvoshan.com

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

...

arvoshan.com

ஞானசார தேரரின் காவி ஆடை கழற்றப்பட்ட விவகாரம்: கம்மன்பிலவின் குற்றச்சாட்டுகள் குறித்து பொலிஸ் விசாரணை!

...

arvoshan.com

ஷிராந்தி ராஜபக்ச மீதான நிதி மோசடி வழக்கு: நீதிமன்றத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

...

arvoshan.com

கொழும்பு போதைப்பொருள் பிடிப்பு: நான்கு ஜமேக்கா நாட்டவர்கள் அக்டோபர் 19 வரை தடுத்து வைப்பு

...

arvoshan.com

ஞானசார தேரர் எனது நண்பர், ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம்: அமைச்சர் லால் காந்த திட்டவட்டம்

...

arvoshan.com

275 மில்லியன் இழப்பீடு செலுத்தாத கெஹெலியவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

...

arvoshan.com

ஜனாதிபதி குறிப்புடன் சமூக ஊடகப் பதிவு: 21 வயது மாணவர் மீது பொலிஸ் விசாரணை

...

arvoshan.com

போதைப்பொருள் வர்த்தகப் பணம்: 22 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனம் முடக்கம்

...

arvoshan.com

களனி ஆற்றுப் படுகை நீரேற்று நிலையத்தை நவீனமயப்படுத்த ஜப்பான் 4.56 பில்லியன் ரூபா நன்கொடை!

...

arvoshan.com

கிராண்பாஸ் மகாவத்தையில் பயங்கர தீ விபத்து: 25 வீடுகள் எரிந்து நாசம்!

...

arvoshan.com

சிறைப்படுத்தப்படும் பிக்குகளின் காவி உடை தொடர்பான தீர்மானம் நிக்காயக்களுக்கே உரியது: அமைச்சர் அறிவிப்பு

...

arvoshan.com

ஷிராந்தி ராஜபக்‌ஷவின் மருத்துவ நிலை குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தல்

...

arvoshan.com

குடிநீர், சுகாதார சீர்திருத்தத்திற்கு ADB வங்கியிடமிருந்து $100 மில்லியன் கடன் பெற அமைச்சரவை அனுமதி!

...