சீன உளவாளி சர்ச்சை: என்விடியா தலைமைச் செயல் அதிகாரியாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்
சீன உளவுத்துறையுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவருடனான தொடர்பு குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து பதவி விலகிய என்விடியா (Nvidia) நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங், மீண்டும் நிறுவனத்தின் தலைவராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா, திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஜென்சன் ஹுவாங் உடனடியாக மீண்டும் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் எனத் தெரிவித்துள்ளது. இதன்படி, அவர் நிறுவனத்தின் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இயக்குநர் சபை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை மீண்டும் வகிப்பார்.
நிறுவனத்தின் தலைவர் ஹார்வி சி. ஜோன்ஸ் (Harvey C. Jones) தெரிவிக்கையில், பங்குதாரர்கள், ஊழியர்கள், வர்த்தகக் கூட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 12ஆம் திகதி, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து ஜென்சன் ஹுவாங் தனது பதவியிலிருந்து விலகியிருந்தார். சீன உளவுத்துறையுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் சீன வர்த்தகப் பெண் ஒருவருடனான தொடர்பும் இதில் உள்ளடங்கியிருந்தது.
என்விடியா நிறுவனம் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான சிப்களை உருவாக்குவதில் உலகளவில் முக்கியப் பங்கு வகிப்பதுடன், சீனாவுடனும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டுள்ளது. இதனால், குறித்த குற்றச்சாட்டுகள் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு தொடர்பான கவலைகளையும் ஏற்படுத்தியிருந்தன.
இதனைத் தொடர்ந்து, தேசியப் பாதுகாப்புக் கொள்கைகளை மேற்பார்வையிடுவதற்காக என்விடியா நிறுவனம் விசேட குழுவொன்றை அமைத்ததுடன், வெளிநாட்டு உளவுத்துறை நடவடிக்கையொன்றின் இலக்காக ஜென்சன் ஹுவாங் இருந்தாரா என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
எனினும், சீன உளவுத்துறை முகவருடன் தனக்குத் தெரிந்தே தொடர்பு இருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை ஜென்சன் ஹுவாங் மறுத்துள்ளார். சீனாவும் தன் மீதான உளவு தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 17ஆம் திகதி, ஜென்சன் ஹுவாங் மீண்டும் பதவிக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், அவரை மீண்டும் நியமிக்கும் எண்ணம் இல்லை என என்விடியா இயக்குநர் சபை அறிவித்திருந்தது. தொழில்நுட்பத் துறையின் பல செல்வாக்குமிக்க நபர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
1993ஆம் ஆண்டு ஜென்சன் ஹுவாங் இணைந்து நிறுவிய என்விடியா நிறுவனம், இன்று உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவுச் சிப் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், அவரை மீண்டும் தலைமைப் பொறுப்பில் நியமித்திருப்பது நிறுவனத்தின் முந்தைய முடிவில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த பெண்ணுக்கு சீன உளவுத்துறையுடன் தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.