CNN உள்ளிட்ட மூன்று ஊடகங்களுக்கான தடையை நீக்க வெள்ளை மாளிகைக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

arvloshan.com

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்குள் செய்தி சேகரிக்க சி.என்.என் (CNN), எம்.எஸ் நவ் (MS NOW) மற்றும் பொலிடிகோ ஆகிய மூன்று முன்னணி ஊடக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கி, அவற்றுக்கான அனுமதியை வழக்கம் போல் வழங்குமாறு அமெரிக்க மத்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த இந்தத் தடை உத்தரவு, அரசியல் அமைப்பிற்கு முரணானது எனத் தெரிவித்து, அமெரிக்க மாவட்ட நீதிபதி திமோதி கெல்லி வியாழக்கிழமை அதிகாலை இந்த இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஊடக நிறுவனங்கள் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், முதற்கட்டமாக 14 நாட்களுக்கு இந்த இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊடக நிறுவனங்களின் நிரந்தரப் நுழைவுச் சீட்டுகள் முறையான சட்டப்பூர்வ நடைமுறைகள் பின்பற்றப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிரான இந்த வழக்கில் ஊடக நிறுவனங்கள் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, "பொய்யான செய்திகளை" (Fake News) பரப்புவதாகக் கூறி, கடந்த வெள்ளிக்கிழமை ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவொன்றை வெளியிட்ட அதிபர் டிரம்ப், குறித்த மூன்று ஊடக நிறுவனங்களுக்கும் வெள்ளை மாளிகைக்குள் நுழையத் தடை விதிப்பதாக அறிவித்தார்.

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்தத் தடை விதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிபதி நிராகரித்துள்ளார். ஊடகங்களின் செய்தி அறிக்கையிடலில் உள்ள உண்மைத்தன்மையின்மை மற்றும் எதிர்மறைத் தன்மையையே டிரம்ப் முதன்மையாகச் சுட்டிக்காட்டியிருந்தாரே தவிர, தேசிய பாதுகாப்பைக் காரணமாக்கவில்லை என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஊடகவியலாளர்களின் நுழைவுச் சீட்டை ரத்து செய்வதற்கு முன்னதாக, அதற்கான தெளிவான நடத்தை விதிகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்றும், அத்தகைய தெளிவான விதிகள் எவையும் பின்பற்றப்படவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தத் தடை உத்தரவானது கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் செயல் என்றும், அரசியல் அமைப்பின் முதல் திருத்தச் சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறி, அமெரிக்காவின் 49 ஊடக அமைப்புகள் மற்றும் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இந்த செய்தி நிறுவனங்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

அமெரிக்க-சீன உச்சிமாநாடு: ஷி ஜின்பிங்கை விமான நிலையம் சென்று வரவேற்றார் ட்ரம்ப்

...

arvoshan.com

தென் ஆபிரிக்காவில் விருந்தில் கொடூரத் துப்பாக்கிச் சூடு: கர்ப்பிணிப் பெண் உட்பட 11 பேர் பலி!

...

arvoshan.com

ஐ.நா.வில் அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

...

arvoshan.com

இந்தோனேசியக் காட்டுத்தீ: 1.75 இலட்சம் பேர் நச்சுப் புகையால் பாதிப்பு!

...

arvoshan.com

கனடாவில் விமான விபத்து: தமிழ்நாட்டு மாணவர்கள் இருவர் பலி

...

arvoshan.com

சவூதி அரேபியாவில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை: மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்!

...

arvoshan.com

CNN உள்ளிட்ட 3 முன்னணி ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகையில் தடை: டொனால்ட் டிரம்ப் அதிரடி!

...

arvoshan.com

கிரீன்லாந்தின் பாதுகாப்பு கட்டுப்பாடு அமெரிக்காவிடம்: ட்ரம்ப் அறிவிப்பு!

...

arvoshan.com

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது ஈரான் தாக்குதல்: மத்திய கிழக்கில் தீவிரமடையும் பதற்றம்

...

arvoshan.com

ஆசியாவின் முதன்மைப் பணக்காரரானார் டிக்டொக் நிறுவனர் ஜாங் யிமிங்!

...

arvoshan.com

இந்தோனேசியாவில் கவிழ்ந்த படகில் இருந்து 3 சடலங்கள் மீட்பு: மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தல்

...

arvoshan.com

100 ஆண்டுகளுக்குப் பின் புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!

...

arvoshan.com

நியூயோர்க்கில் சாதனை: இலங்கை ஓவியர் இவான் பீரிஸின் கலைப்படைப்பு 6,40,000 டொலருக்கு ஏலம்!

...

arvoshan.com

ஈரானில் அமெரிக்கா போர் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிக்கை

...

arvoshan.com

அமெரிக்காவின் 100% வரி அச்சுறுத்தல்: ரஷிய எண்ணெய் கொள்முதலில் பின்வாங்காத இந்தியா!

...