13 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை அறிவிப்பு வெளியீடு
நாட்டின் 13 மாவட்டங்களுக்கு 'எச்சரிக்கை மட்டம்' (Caution level) அளவிலான வெப்பமான வானிலை தொடர்பான அறிவுறுத்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் உட்பட மொனராகலை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியினருக்கே இந்த வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் சில இடங்களில் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு 'எச்சரிக்கை மட்டம்' வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் அதிக வெப்பத்தால் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.