2,345 இரண்டாம் நிலை பாடசாலைகளுக்கு அதிவேக ஃபைபர் இணைய வசதி

arvloshan.com

இலங்கை முழுவதும் உள்ள 2,345 அரசு இரண்டாம் நிலை பாடசாலைகளுக்கு புதிய அதிவேக ஃபைபர் வழியிலான (Fibre) இணைய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில் நாட்டின் அனைத்து 3,832 ஆரம்பப் (Primary) பாடசாலைகளுக்கும் இச்சேவையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) "கிராமத்திற்குத் தொலைத்தொடர்பு" (Communication to the Village) திட்டத்தின் கீழ், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுடன் இணைந்து இத்திட்டம் கூட்டாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

நாடளாவிய ரீதியில் உள்ள 6,225 இரண்டாம் நிலை பாடசாலைகளுக்கு அதிவேக ஃபைபர் இணைய இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 1,264 பாடசாலைகளில் ஏற்கனவே ஃபைபர் இணைப்புகள் காணப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2,345 பாடசாலைகளுக்குப் புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள 2,616 இரண்டாம் நிலை பாடசாலைகளுக்கு ஃபைபர் இணைய இணைப்புகளை வழங்கும் பணிகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை புதிதாக இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ள 2,345 பாடசாலைகளில், கிழக்கு மாகாணத்தில் 347 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 334 பாடசாலைகளும், சபரகமுவ மாகாணத்தில் 303 பாடசாலைகளும் உள்ளடங்குகின்றன. மேலும், தென் மாகாணத்தில் 300, மேல் மாகாணத்தில் 285, மத்திய மாகாணத்தில் 275, ஊவா மாகாணத்தில் 176, வட மாகாணத்தில் 172 மற்றும் வடமத்திய மாகாணத்தில் 153 பாடசாலைகளுக்கும் இவ்விணைய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த பாடசாலைகளுக்கு மாதம் ஒன்றிற்கு 5,130 ரூபாய் செலவில் எல்லைற்ற (Unlimited) இணைய வசதித் தொகுப்புகளை வழங்குவதற்காக 2026ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக, 2027/2028 காலப்பகுதியில் நாட்டில் உள்ள அனைத்து 3,832 ஆரம்பப் பாடசாலைகளுக்கும் அதிவேக இணைய வசதிகளை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள ஒவ்வொரு பாடசாலைக்கும் அதிவேக இணைய தொடர்பை உறுதி செய்வதே இதன் இறுதி இலக்காகும்.

டிஜிட்டல் வழியிலான கல்வி முறைமை மற்றும் தற்போதைய கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதுடன், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்கு நவீன தகவல் தொழில்நுட்பச் சாதனங்களைச் சமமாகப் பயன்படுத்தும் வாய்ப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: பொதுமக்களுக்கு பதற்றத்தை தவிர்க்குமாறு வேண்டுகோள்!

...

arvoshan.com

இளைஞர் அரசியல் தலைமையை வலுப்படுத்த புதிய திட்டம்: WFD உடன் நாடாளுமன்ற மன்றம் பேச்சு

...

arvoshan.com

அனைவருக்கும் பாதுகாப்பான உறைவிடம்: புதிய தேசிய வீட்டு வசதிக் கொள்கையை அறிவித்தார் பிரதமர்!

...

arvoshan.com

முன்னாள் அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான வழக்கு நவம்பருக்கு ஒத்திவைப்பு

...

arvoshan.com

ஹம்பாந்தோட்டை துறைமுகம் 10 லட்சம் கொள்கலன் கையாளுகையை கடந்து சாதனை

...

arvoshan.com

13 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை அறிவிப்பு வெளியீடு

...

arvoshan.com

இலங்கை திரும்பும்போது கைதாவதைத் தவிர்க்க ஷிராந்தி ராஜபக்‌‌ஷ முன்பிணை கோரி மனு

...

arvoshan.com

2027 முதல் 6ஆம் தர மாணவர்களுக்கு தொழில்முனைவோர் மற்றும் நிதிசார் அறிவூட்டல் பாடநெறி அறிமுகம்!

...

arvoshan.com

அரசியல் பழிவாங்கல், அரசு அதிகார துஷ்பிரயோகம்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சாடல்!

...

arvoshan.com

இலங்கை NGO சட்டமூலம்: ஐ.நா. நிபுணர்கள் தீவிர கவலை

...

arvoshan.com

ஆசிரியர் சேவையில் கல்வியியல் பட்டதாரிகள்: திருத்தம் வந்ததும் நியமனம் என பிரதமர் அறிவிப்பு

...

arvoshan.com

இந்திய – இலங்கை கூட்டுறவு அமைப்புகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!

...

arvoshan.com

ஞானசார தேரரை மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

...

arvoshan.com

திருமணங்களில் பாடல் பாடக் கட்டணம்? பரவும் வதந்திக்கு அமைச்சர் விஜித ஹேரத் மறுப்பு!

...

arvoshan.com

வேரஹரவில் போலி ஓட்டுநர் உரிமக் கடத்தல்: தம்பதி கைது!

...