முன்னாள் அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான வழக்கு நவம்பருக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக லஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு தொடர்பான மேலதிக சாட்சியப் பதிவுகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரசாந்த கொடவெல முன்னிலையில் இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்றைய வழக்கு விசாரணைகளின் போது சாட்சிகளிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. சாட்சியப் பதிவுகளைத் தொடர்ந்து, வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.