இலங்கை திரும்பும்போது கைதாவதைத் தவிர்க்க ஷிராந்தி ராஜபக்‌‌ஷ முன்பிணை கோரி மனு

arvloshan.com

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பும்போது பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து தாம் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாகத் தெரிவித்து, முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்‌ஷ மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை (Anticipatory Bail) மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்‌ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், தாம் கைது செய்யப்படும் பட்சத்தில் எவ்வித நிபந்தனைகளுடனாயினும் தம்மைப் பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த முன்பிணை மனு மாளிகாகந்த நீதவான் ஜனனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டத்தரணி ஜெயபாலன் ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனுவில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் எதிர்மனுதாரராகவும், ஷிராந்தி ராஜபக்‌‌ஷ மனுதாரராகவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு அவருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடு சென்றுள்ள ஷிராந்தி ராஜபக்‌ஷ, தற்போது இலங்கைக்கு வெளியில் தங்கியுள்ளார்.

திடீர் உபாதை காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.

அவர் வெளிநாடு செல்வதற்கு முன்னர், செப்டெம்பர் 24ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதன் பின்னர், தமக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தபோதிலும் ஷிராந்தி ராஜபக்‌ஷ வெளிநாடு சென்றுள்ளதாக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருந்தது.

இருப்பினும், இக்கூற்றை ராஜபக்‌ஷ குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

விமானநிலையத்தை அடையும் வரை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிடமிருந்து எவ்வித அழைப்பாணையும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும், விமானநிலையம் சென்று நாட்டை விட்டுப் புறப்படத் தயாரான பின்னரே குறித்த அழைப்பாணை கையளிக்கப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: பொதுமக்களுக்கு பதற்றத்தை தவிர்க்குமாறு வேண்டுகோள்!

...

arvoshan.com

இளைஞர் அரசியல் தலைமையை வலுப்படுத்த புதிய திட்டம்: WFD உடன் நாடாளுமன்ற மன்றம் பேச்சு

...

arvoshan.com

அனைவருக்கும் பாதுகாப்பான உறைவிடம்: புதிய தேசிய வீட்டு வசதிக் கொள்கையை அறிவித்தார் பிரதமர்!

...

arvoshan.com

முன்னாள் அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான வழக்கு நவம்பருக்கு ஒத்திவைப்பு

...

arvoshan.com

ஹம்பாந்தோட்டை துறைமுகம் 10 லட்சம் கொள்கலன் கையாளுகையை கடந்து சாதனை

...

arvoshan.com

13 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை அறிவிப்பு வெளியீடு

...

arvoshan.com

2027 முதல் 6ஆம் தர மாணவர்களுக்கு தொழில்முனைவோர் மற்றும் நிதிசார் அறிவூட்டல் பாடநெறி அறிமுகம்!

...

arvoshan.com

2,345 இரண்டாம் நிலை பாடசாலைகளுக்கு அதிவேக ஃபைபர் இணைய வசதி

...

arvoshan.com

அரசியல் பழிவாங்கல், அரசு அதிகார துஷ்பிரயோகம்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சாடல்!

...

arvoshan.com

இலங்கை NGO சட்டமூலம்: ஐ.நா. நிபுணர்கள் தீவிர கவலை

...

arvoshan.com

ஆசிரியர் சேவையில் கல்வியியல் பட்டதாரிகள்: திருத்தம் வந்ததும் நியமனம் என பிரதமர் அறிவிப்பு

...

arvoshan.com

இந்திய – இலங்கை கூட்டுறவு அமைப்புகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!

...

arvoshan.com

ஞானசார தேரரை மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

...

arvoshan.com

திருமணங்களில் பாடல் பாடக் கட்டணம்? பரவும் வதந்திக்கு அமைச்சர் விஜித ஹேரத் மறுப்பு!

...

arvoshan.com

வேரஹரவில் போலி ஓட்டுநர் உரிமக் கடத்தல்: தம்பதி கைது!

...