அனைவருக்கும் பாதுகாப்பான உறைவிடம்: புதிய தேசிய வீட்டு வசதிக் கொள்கையை அறிவித்தார் பிரதமர்!

arvloshan.com

அனைத்து பிரஜைகளுக்கும் பாதுகாப்பான மற்றும் நிலையான உறைவிடத்தை உறுதி செய்யும் நோக்கில், ஒன்பது அடிப்படைக் கொள்கைகளை உள்ளடக்கிய புதிய தேசிய வீட்டு வசதிக் கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்று (5) கொழும்பு அலரி மாளிகையில் இடம்பெற்ற உலகக் குடியிருப்பு நாள் (World Habitat Day 2026) தேசிய நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்:

"வீட்டு வசதி என்பது நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் அடிப்படை மனித உரிமையாகும். நீண்டகால மற்றும் நிலையான தேசிய வீட்டு வசதி கட்டமைப்பினை உருவாக்குவதற்காகவே அரசாங்கம் இந்த ஒன்பது அடிப்படைக் கொள்கைகளுடனான கொள்கை மாற்றங்களை முன்னெடுத்துள்ளது.

மக்களின் நேரடிப் பங்களிப்புடன் கூடிய சமூகங்களை வலுப்படுத்துவதும், ஒவ்வொருவரும் தமக்கான கண்ணியமான வீடொன்றை அமைத்துக் கொள்வதை உறுதி செய்வதுமே எமது பிரதான நோக்கமாகும்.

சுற்றுச்சூழல் நிலைபேறுதன்மை , கடுமையான கட்டுமானத் தரநிலைகள் மற்றும் பொருளாதார மீள்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த, குறைந்த செலவிலான வீட்டு வசதி அமைப்பினை உருவாக்குவதே இத்திட்டத்தின் தொலைநோக்காகும். இதற்காகத் தரவு சார்ந்த மற்றும் அறிவியல் பூர்வமான அபிவிருத்தி முறைகள் பயன்படுத்தப்படும்.

இந்த முன்னெடுப்பில் நாட்டின் எந்தவொரு பிரஜையும் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது" எனக் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனிதக் குடியிருப்பு திட்டத்தின் பங்களிப்புடன், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் "அனைவருக்கும் பாதுகாப்பான வீடொன்று" எனும் உலகளாவிய கருப்பொருளின் கீழ் இந்த தேசிய நினைவுகூரல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: பொதுமக்களுக்கு பதற்றத்தை தவிர்க்குமாறு வேண்டுகோள்!

...

arvoshan.com

இளைஞர் அரசியல் தலைமையை வலுப்படுத்த புதிய திட்டம்: WFD உடன் நாடாளுமன்ற மன்றம் பேச்சு

...

arvoshan.com

முன்னாள் அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான வழக்கு நவம்பருக்கு ஒத்திவைப்பு

...

arvoshan.com

ஹம்பாந்தோட்டை துறைமுகம் 10 லட்சம் கொள்கலன் கையாளுகையை கடந்து சாதனை

...

arvoshan.com

13 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை அறிவிப்பு வெளியீடு

...

arvoshan.com

இலங்கை திரும்பும்போது கைதாவதைத் தவிர்க்க ஷிராந்தி ராஜபக்‌‌ஷ முன்பிணை கோரி மனு

...

arvoshan.com

2027 முதல் 6ஆம் தர மாணவர்களுக்கு தொழில்முனைவோர் மற்றும் நிதிசார் அறிவூட்டல் பாடநெறி அறிமுகம்!

...

arvoshan.com

2,345 இரண்டாம் நிலை பாடசாலைகளுக்கு அதிவேக ஃபைபர் இணைய வசதி

...

arvoshan.com

அரசியல் பழிவாங்கல், அரசு அதிகார துஷ்பிரயோகம்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சாடல்!

...

arvoshan.com

இலங்கை NGO சட்டமூலம்: ஐ.நா. நிபுணர்கள் தீவிர கவலை

...

arvoshan.com

ஆசிரியர் சேவையில் கல்வியியல் பட்டதாரிகள்: திருத்தம் வந்ததும் நியமனம் என பிரதமர் அறிவிப்பு

...

arvoshan.com

இந்திய – இலங்கை கூட்டுறவு அமைப்புகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!

...

arvoshan.com

ஞானசார தேரரை மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

...

arvoshan.com

திருமணங்களில் பாடல் பாடக் கட்டணம்? பரவும் வதந்திக்கு அமைச்சர் விஜித ஹேரத் மறுப்பு!

...

arvoshan.com

வேரஹரவில் போலி ஓட்டுநர் உரிமக் கடத்தல்: தம்பதி கைது!

...