ஷமோண்டா கால்நடை வைரஸ்: பிரான்ஸில் முதலாவது மனிதத் தொற்று உறுதி – உயிரிழந்த நோயாளி!

arvloshan.com

பிரான்ஸில் ஷமோண்டா (Shamonda) கால்நடை வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வைரஸ் மனிதருக்குத் தொற்றிய முதலாவது சம்பவம் இதுவென அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்த நபருக்கு இந்த மாதத்தின் ஆரம்பத்தில் தொற்று ஏற்பட்டிருந்ததாகவும், விலங்குகளைப் பாதிக்கும் இந்த வைரஸ் இதற்கு முன்னர் மனிதர்களிடம் கண்டறியப்படவில்லை என்றும் பிரான்ஸின் சுகாதார மற்றும் விவசாய அமைச்சுகள் வியாழக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பிராந்தியங்களில் பல தசாப்தங்களாக இந்த வைரஸ் பரவி வந்தபோதிலும், இதுவரை மனிதர்களில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை

தற்போதைய நிலையில், இந்த வைரஸ் காரணமாகப் பொதுமக்களுக்கு எந்தவொரு சுகாதார அச்சுறுத்தலும் அடையாளம் காணப்படவில்லை என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடுமையாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்திருந்த ஒருவருக்கு ஏற்பட்ட விதிவிலக்கான தொற்றுச் சம்பவமாக இது இருக்கலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனமும் (WHO) இந்தத் தொற்று பரவலாகப் பரவுவதற்கான சாத்தியம் குறைவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படியும், இதனுடன் நெருங்கிய தொடர்புடைய வைரஸ்களின் பரவல் முறைகள் குறித்த அறிவின் அடிப்படையிலும், இது தனிப்பட்ட தொற்றுச் சம்பவமாகவே கருதப்படுவதாகவும், தற்போதைய நிலையில் பரவலான தொற்றுக்கு வழிவகுக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறு பரவுகிறது ஷமோண்டா வைரஸ்?

1960களின் நடுப்பகுதியில் நைஜீரியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட ஷமோண்டா வைரஸ், Orthobunyavirus எனப்படும் வைரஸ் வகையைச் சேர்ந்ததாகும். இந்த வைரஸ் வகையில் 138 இனங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது பிரதானமாகக் கால்நடைகளை, குறிப்பாக மாடுகளைப் பாதிக்கிறது. Culicoides எனப்படும் சிறிய கடிக்கும் ஈக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.

ஆப்பிரிக்காவிலும் ஜப்பானிலும் பல ஆண்டுகளாக விலங்குகளிடையே இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதுடன், 2026ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் அதன் பரவல் பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் இந்த வைரஸ் மனிதர்களுக்குத் தொற்றும் எனக் கருதப்படவில்லை.

கிழக்கு பிரான்ஸில் தொற்று ஏற்பட்டிருக்கலாம்

பிரான்ஸின் விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள தகவலின்படி, கிழக்கு பிரான்ஸில் கடிக்கும் ஈ ஒன்றின் மூலம் இந்த நபருக்கு வைரஸ் தொற்றியிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் 2026ஆம் ஆண்டின் வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் விலங்குகளிடையே இந்த வைரஸ் பரவியிருந்ததாகப் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மனித, விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இணைந்து உயிரியல், மருத்துவ மற்றும் தொற்றுநோயியல் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ECDC) ஆகியவற்றுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

அட்லாண்டிக் பெருங்கடலுக்கு தனது பெயரைச் சூட்ட விரும்பிய ட்ரம்ப் – மறுத்தார் கூகுள் CEO சுந்தர் பிச்சை!

...

arvoshan.com

தேநீர் அருந்தும் முறை இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்! ஆய்வில் புதிய தகவல்

...

arvoshan.com

ஐக்கிய அரபு இராச்சியத்திற்குப் பயணிக்கிறீர்களா? இந்த மருந்துகள் உங்களைச் சிக்கலில் ஆழ்த்தலாம்!

...

arvoshan.com

சவூதி அரேபியாவின் கிங் ஃபஹ்த் விமான நிலையம் மீது தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு, எட்டு பேர் காயம்!

...

arvoshan.com

அமெரிக்க தபால் சேவைக்கு 126 மில்லியன் டொலர் இழப்பு: பாகிஸ்தானில் ஒருவர் கைது!

...

arvoshan.com

மரண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: அரச ஊடகத்தில் மீண்டும் தோன்றிய வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்!

...

arvoshan.com

சமூக வலைதளப் பதிவுக்காக 23 வயது ஈரானிய மாணவிக்குத் தூக்குத் தண்டனை!

...

arvoshan.com

தென் கொரியாவுக்கு எதிரான பிரசார ஒலிபரப்புகளை மீண்டும் ஆரம்பிக்கிறது வட கொரியா!

...

arvoshan.com

பிரான்ஸ் போராட்டங்களுக்கு குடியேறிகளே காரணம் எனக் குற்றச்சாட்டு – தீவிர வலதுசாரிகளின் அரசியல் பிரசாரம் தீவிரம்!

...

arvoshan.com

ட்ரம்பின் 5,000 டொலர் காசோலை வாக்குறுதி: குடியரசுக் கட்சி ஆதரவாளர்களிடமே சந்தேகம்!

...

arvoshan.com

மாலியில் ஐ.எஸ். ஆதரவு ஆயுதக் குழு தாக்குதல்: 48 பேர் பலி

...

arvoshan.com

அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸின் கால் அகற்றம் – திட்டமிட்ட தாக்குதல் என சந்தேகம்!

...

arvoshan.com

பெண்கள் சுகாதாரத்திற்காக புதிய பிரிவு, விசேட பணிக்குழு – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

...

arvoshan.com

தென்கொரிய எல்லையில் மீண்டும் ஒலிபெருக்கிப் பிரசாரம்; கூடுதல் ஆயுதங்களை நிலைநிறுத்த வடகொரியா மிரட்டல்!

...

arvoshan.com

கென்யாவில் பட்டினிப் போட்டு 191 பேரைக் கொன்றதாகக் குற்றச்சாட்டு – மத போதகருக்கு இன்று தீர்ப்பு!

...