வெளிநாடுகளில் பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டு இலங்கை திரும்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஆராய்கிறது அரசாங்கம்

arvloshan.com

வெளிநாடுகளில் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டு, பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுபவர்களுக்கு எதிராக இலங்கையிலும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியமும் அதன் கீழ் நியமிக்கப்பட்ட உபகுழுவும் இணைந்து கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடத்திய கூட்டத்திலேயே இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வெளிநாடுகளில் பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நபர்களின் குற்றப் பின்னணி தொடர்பான தகவல்கள் இலங்கையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பெரும்பாலும் கிடைப்பதில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், உரிய கண்காணிப்பின்றி இத்தகைய நபர்கள் மீண்டும் சமூகத்துடன் இணைந்து வாழும் நிலை ஏற்படுவதுடன், அவர்கள் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதற்கான அபாயமும் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு, வெளிநாட்டு நீதிமன்றங்களால் வழங்கப்படும் இத்தகைய குற்றவியல் தீர்ப்புகளை இலங்கையிலும் அங்கீகரித்து நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டுள்ளன.

மேலும், வெளிநாடுகளில் பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட இலங்கைப் பிரஜைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச ஒருங்கிணைப்பு பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், இத்தகைய நபர்களின் விபரங்களை இலங்கை பொலிஸாரின் குற்றப் பதிவுக் கட்டமைப்பில் உள்ளடக்குவதற்குத் தேவையான சட்ட மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்போது அவர்களின் குற்றப் பின்னணியை கட்டாயமாகப் பரிசோதிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்துவது குறித்தும் முன்மொழியப்பட்டுள்ளது.

அதேவேளை, மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், சட்டரீதியான அதிகாரங்களுடன் கூடிய இடர் மதிப்பீட்டு அடிப்படையிலான கண்காணிப்பு பொறிமுறையொன்றை உருவாக்குவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது அல்லது புதிய சட்டங்களை இயற்றுவது குறித்தும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது.

இக்கலந்துரையாடலில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, அரச பகுப்பாய்வாளர் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

...

arvoshan.com

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக விவசாயிகளுக்கு அவுஸ்திரேலியா, ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு உதவி!

...

arvoshan.com

தனித்தனி வீதி விபத்துகளில் சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு!

...

arvoshan.com

இணைய வங்கி மோசடி: ஒரு மில்லியன் ரூபாய் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் தனியார் நிறுவன ஊழியர் கைது!

...

arvoshan.com

தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் படகு முற்றுகை – 7 பேர் கைது!

...

arvoshan.com

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பம்!

...

arvoshan.com

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் ரூ.181 மில்லியன் பெறுமதியான கஞ்சா மீட்பு

...

arvoshan.com

மாத்தறை சார்க் கலாசார நிலையத்தை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் கீழ் அபிவிருத்தி செய்யத் திட்டம்

...

arvoshan.com

2028ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் PAYE வருமான வரிக்கு மேலும் நிவாரணம் – ஜனாதிபதி அறிவிப்பு!

...

arvoshan.com

இலங்கையில் நெல் செய்கையை குறைந்தது மூன்றில் ஒரு பங்கால் குறைக்க வேண்டும் – லால் காந்த

...

arvoshan.com

1,600 சுற்றுலாப் பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த சொகுசுக் கப்பல் – 90 வீதமானோர் இந்தியர்கள்

...

arvoshan.com

சம்பள அதிகரிப்பு கோரிக்கை: அரச ஊழியர்களுக்கு பிரதி அமைச்சர் சவால்!

...

arvoshan.com

கொழும்பில் இந்திய பிரதி உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் மஹிந்த ராஜபக்ஷ

...

arvoshan.com

இலங்கையில் பாசிப்பழச் செய்கைக்கு புதிய காப்புறுதித் திட்டம் – ஏக்கருக்கு 3.87 இலட்சம் ரூபா காப்புறுதிப் பாதுகாப்பு

...

arvoshan.com

இலங்கையில் 20–24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

...