தனித்தனி வீதி விபத்துகளில் சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு!

arvloshan.com

எம்பிலிப்பிட்டிய, தம்புள்ளை மற்றும் ஹோமாகம ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் ஒரு வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

கிரலவெல்கட்டுவ பகுதியில், எம்பிலிப்பிட்டிய – நோனகம வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது, நோனகம நோக்கிப் பயணித்த லொறி ஒன்று நேற்று (26) மாலை மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் காயமடைந்து எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், சிகிச்சை பெற்று வந்த ஒரு வயதும் ஐந்து மாதங்களுமான சிறுமி உயிரிழந்துள்ளார்.

கலன்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தம்புள்ளை – பகமூண வீதியின் நான்காவது மைல்கல் அருகே, கான்கிரீட் கலவை இயந்திர வாகனம் ஒன்று மிதிவண்டியுடன் மோதியதில் 70 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த மிதிவண்டி செலுத்தியவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அவர் கந்தலம பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான்கிரீட் கலவை இயந்திர வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இன்று (27) அதிகாலை ஹோமாகம, மாகும்புர பகுதியில் ஹைலெவல் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள் சாரதிகளும் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த மூன்று விபத்துகள் தொடர்பிலும் எம்பிலிப்பிட்டிய, தம்புள்ளை மற்றும் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

...

arvoshan.com

வெளிநாடுகளில் பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டு இலங்கை திரும்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஆராய்கிறது அரசாங்கம்

...

arvoshan.com

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக விவசாயிகளுக்கு அவுஸ்திரேலியா, ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு உதவி!

...

arvoshan.com

இணைய வங்கி மோசடி: ஒரு மில்லியன் ரூபாய் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் தனியார் நிறுவன ஊழியர் கைது!

...

arvoshan.com

தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் படகு முற்றுகை – 7 பேர் கைது!

...

arvoshan.com

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பம்!

...

arvoshan.com

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் ரூ.181 மில்லியன் பெறுமதியான கஞ்சா மீட்பு

...

arvoshan.com

மாத்தறை சார்க் கலாசார நிலையத்தை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் கீழ் அபிவிருத்தி செய்யத் திட்டம்

...

arvoshan.com

2028ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் PAYE வருமான வரிக்கு மேலும் நிவாரணம் – ஜனாதிபதி அறிவிப்பு!

...

arvoshan.com

இலங்கையில் நெல் செய்கையை குறைந்தது மூன்றில் ஒரு பங்கால் குறைக்க வேண்டும் – லால் காந்த

...

arvoshan.com

1,600 சுற்றுலாப் பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த சொகுசுக் கப்பல் – 90 வீதமானோர் இந்தியர்கள்

...

arvoshan.com

சம்பள அதிகரிப்பு கோரிக்கை: அரச ஊழியர்களுக்கு பிரதி அமைச்சர் சவால்!

...

arvoshan.com

கொழும்பில் இந்திய பிரதி உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் மஹிந்த ராஜபக்ஷ

...

arvoshan.com

இலங்கையில் பாசிப்பழச் செய்கைக்கு புதிய காப்புறுதித் திட்டம் – ஏக்கருக்கு 3.87 இலட்சம் ரூபா காப்புறுதிப் பாதுகாப்பு

...

arvoshan.com

இலங்கையில் 20–24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

...