மாத்தறை சார்க் கலாசார நிலையத்தை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் கீழ் அபிவிருத்தி செய்யத் திட்டம்

arvloshan.com

மாத்தறை நவிமன பகுதியில் அமைந்துள்ள சார்க் (SAARC) கலாசார நிலையத்தை இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த கலாசார நிலையத்தை இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்திடம் கையளிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், அதன் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் கடந்த நவம்பர் 20ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் தொழிற்கல்விப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபொன்சோ மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கலாசார நிலையத்தின் தற்போதைய நிலைமை, அங்குள்ள கட்டடங்களின் பயன்பாடு மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன.

இந்தத் திட்டத்தை தேசியத் திட்டமொன்றின் கீழ் முறையாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை அபொன்சோ வலியுறுத்தினார்.

இதன்போது, தற்போதுள்ள கட்டடங்களின் நிலைமை மற்றும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொள்வதுடன், எதிர்கால அபிவிருத்திப் பணிகள் தொடர்பான தகவல்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை இராணுவத்துடன் கலந்தாலோசிக்கவும் முன்மொழியப்பட்டது.

குறித்த நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், எதிர்வரும் சில வாரங்களுக்குள் மீண்டும் கூடி, அடுத்தகட்டத் திட்டங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தீர்மானிக்கவும் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.

இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களுக்கு இந்தக் கலாசார நிலையத்தை வினைத்திறனுடன் பயன்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இக்கலந்துரையாடலில் இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் நளின் பிரசன்ன ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் ரூ.181 மில்லியன் பெறுமதியான கஞ்சா மீட்பு

...

arvoshan.com

2028ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் PAYE வருமான வரிக்கு மேலும் நிவாரணம் – ஜனாதிபதி அறிவிப்பு!

...

arvoshan.com

இலங்கையில் நெல் செய்கையை குறைந்தது மூன்றில் ஒரு பங்கால் குறைக்க வேண்டும் – லால் காந்த

...

arvoshan.com

1,600 சுற்றுலாப் பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த சொகுசுக் கப்பல் – 90 வீதமானோர் இந்தியர்கள்

...

arvoshan.com

சம்பள அதிகரிப்பு கோரிக்கை: அரச ஊழியர்களுக்கு பிரதி அமைச்சர் சவால்!

...

arvoshan.com

கொழும்பில் இந்திய பிரதி உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் மஹிந்த ராஜபக்ஷ

...

arvoshan.com

இலங்கையில் பாசிப்பழச் செய்கைக்கு புதிய காப்புறுதித் திட்டம் – ஏக்கருக்கு 3.87 இலட்சம் ரூபா காப்புறுதிப் பாதுகாப்பு

...

arvoshan.com

இலங்கையில் 20–24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

...

arvoshan.com

சுப்ரீம் SAT செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பில் ரோஹித ராஜபக்ஷவிடம் விசாரணை!

...

arvoshan.com

குற்றக் கும்பலுக்கு ரி-56 துப்பாக்கியை விற்றதாகக் குற்றச்சாட்டு – டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்

...

arvoshan.com

நெடுந்தீவின் முதலாவது நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டது!

...

arvoshan.com

பிரித்தானியாவால் ஆபிரிக்க நாட்டுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிரிழப்பு – இரகசிய ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சை

...

arvoshan.com

வல்வெட்டித்துறையில் 72ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

...

arvoshan.com

யாழில். 50 மதுபான போத்தலுடன் ஒருவர் கைது

...

arvoshan.com

பாடசாலை மாணவர்கள் தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய மாதிரிச் சந்தை – அரசாங்கம் திட்டம்

...