கொழும்பில் இந்திய பிரதி உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் மஹிந்த ராஜபக்ஷ

arvloshan.com

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேயி குல்கர்னியை கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு கடந்த புதன்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பு தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை – இந்திய இருதரப்பு உறவுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

வரலாறு, கலாசாரம் மற்றும் மத ரீதியான உறவுகளை அடிப்படையாகக் கொண்ட இலங்கை – இந்திய நட்புறவு, இரு நாடுகளினதும் பரஸ்பர நலன்களுக்கான விரிவான ஒத்துழைப்பாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த ஆண்டு ஏற்பட்ட 'டித்வா' (Ditwah) சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கும் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

அனர்த்த காலத்தில் இந்தியா வழங்கிய ஆதரவு, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவையும் சகோதரத்துவத்தையும் பிரதிபலிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் ரூ.181 மில்லியன் பெறுமதியான கஞ்சா மீட்பு

...

arvoshan.com

மாத்தறை சார்க் கலாசார நிலையத்தை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் கீழ் அபிவிருத்தி செய்யத் திட்டம்

...

arvoshan.com

2028ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் PAYE வருமான வரிக்கு மேலும் நிவாரணம் – ஜனாதிபதி அறிவிப்பு!

...

arvoshan.com

இலங்கையில் நெல் செய்கையை குறைந்தது மூன்றில் ஒரு பங்கால் குறைக்க வேண்டும் – லால் காந்த

...

arvoshan.com

1,600 சுற்றுலாப் பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த சொகுசுக் கப்பல் – 90 வீதமானோர் இந்தியர்கள்

...

arvoshan.com

சம்பள அதிகரிப்பு கோரிக்கை: அரச ஊழியர்களுக்கு பிரதி அமைச்சர் சவால்!

...

arvoshan.com

இலங்கையில் பாசிப்பழச் செய்கைக்கு புதிய காப்புறுதித் திட்டம் – ஏக்கருக்கு 3.87 இலட்சம் ரூபா காப்புறுதிப் பாதுகாப்பு

...

arvoshan.com

இலங்கையில் 20–24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

...

arvoshan.com

சுப்ரீம் SAT செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பில் ரோஹித ராஜபக்ஷவிடம் விசாரணை!

...

arvoshan.com

குற்றக் கும்பலுக்கு ரி-56 துப்பாக்கியை விற்றதாகக் குற்றச்சாட்டு – டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்

...

arvoshan.com

நெடுந்தீவின் முதலாவது நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டது!

...

arvoshan.com

பிரித்தானியாவால் ஆபிரிக்க நாட்டுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிரிழப்பு – இரகசிய ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சை

...

arvoshan.com

வல்வெட்டித்துறையில் 72ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

...

arvoshan.com

யாழில். 50 மதுபான போத்தலுடன் ஒருவர் கைது

...

arvoshan.com

பாடசாலை மாணவர்கள் தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய மாதிரிச் சந்தை – அரசாங்கம் திட்டம்

...