புதிய TIN நடைமுறை: இனி வருமான வரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை!

arvloshan.com

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் இனி உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை எனப் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.

TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (03) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர், TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் என்றும், இது தொடர்பில் பதற்றமடையத் தேவையில்லை என்றும் கேட்டுக்கொண்டார்.

சாரதி அனுமதிப்பத்திரம், வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் மற்றும் வங்கிக் கணக்குகளைத் திறத்தல் உள்ளிட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக TIN சான்றிதழ் தேவைப்படும் நிலையில், அதனைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி, இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தமது தேசிய அடையாள அட்டையின் (NIC) பிரதியொன்று, செயற்பாட்டிலுள்ள கையடக்கத் தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைத் தாம் சேவையைப் பெற்றுக்கொள்ளும் நிறுவனத்திடம் சமர்ப்பித்தால் போதுமானது.

குறித்த நிறுவனம், விண்ணப்பதாரரின் விபரங்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அனுப்பி, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும். இதனூடாக விண்ணப்பதாரருக்கான TIN அல்லது வருமான வரி இலக்கம் வழங்கப்பட்டு, அவர் சமர்ப்பித்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் எனப் பிரதி அமைச்சர் விளக்கமளித்தார்.

மேலும், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையவழி முறைமையின் ஊடாகவும் TIN மற்றும் வருமான வரிச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே TIN இலக்கத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் மற்றும் இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்கள் என இரு தரப்பினருக்கும் இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

நவம்பர் 1ஆம் திகதி முதல் பல்வேறு அரச மற்றும் நிதிச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதனைப் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

இதனால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் தாமதங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வரும் பின்னணியிலேயே, புதிய நடைமுறை தொடர்பான அறிவிப்பை பிரதி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு மூன்று கப்பல்களில் எரிவாயுவை இறக்குமதி செய்ய LAUGFS Gas நடவடிக்கை

...

arvoshan.com

இலங்கையில் டிஜிட்டல் சொத்துக்களைப் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்த முடியாது – மத்திய வங்கி ஆளுநர்

...

arvoshan.com

சம்பளம் வழங்கப்படாமைக்கு எதிராக ‘மவ்பிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ ஊடகவியலாளர்கள் போராட்டம்

...

arvoshan.com

TIN இலக்கம் இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்தல், வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தலில் தற்காலிக சலுகை!

...

arvoshan.com

ரத்கம பகுதியில் வெள்ளப் பாதிப்பைக் கட்டுப்படுத்த ரூ.3.38 பில்லியன் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

ABU பொதுக்கூட்டத்துக்கு 10.4 கோடி ரூபாய் அரச நிதி: அமைச்சர் நளிந்த விளக்கம்

...

arvoshan.com

மருத்துவர்களின் கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் போராட்டம் – முக்கிய வைத்தியசாலைகளில் ஆர்ப்பாட்டம் நடத்த GMOA தீர்மானம்!

...

arvoshan.com

சம்பூர் – கப்பல்துறை மின்சார பரிமாற்றத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

...

arvoshan.com

சிறுநீரக நோயாளிகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய்களுக்கான மருந்துகள் கொள்வனவு – அமைச்சரவை அங்கீகாரம்

...

arvoshan.com

டித்வா புயலால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க ரூ. 3.3 பில்லியன் ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி!

...

arvoshan.com

இலங்கையின் நிலையான வர்த்தகத்தை மேம்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் 10 மில்லியன் யூரோ நிதியுதவி – அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

நீதித்துறையின் சுதந்திரத்திற்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து குரல் கொடுத்தவர் லால் விஜேநாயக்க – சஜித் புகழாரம்

...

arvoshan.com

வவுனியா ஏ9 வீதியின் புனரமைப்புக்கு 1.3 பில்லியன் ரூபா ஒப்பந்தம்

...

arvoshan.com

கிரிஷ் ஒப்பந்த மோசடி வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை – எனினும் தொடர்ந்து விளக்கமறியலில்

...

arvoshan.com

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிராகரிப்பு: நாடாளுமன்றத்தில் செங்கோலைக் கைப்பற்ற எதிர்க்கட்சி எம்.பிக்கள் முயற்சி

...