சிறுநீரக நோயாளிகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய்களுக்கான மருந்துகள் கொள்வனவு – அமைச்சரவை அங்கீகாரம்

arvloshan.com

சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான சிகிச்சை மருந்துகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய்களுக்கான மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, முறையே 990 மில்லியன் ரூபா மற்றும் 702,000 அமெரிக்க டொலர் பெறுமதியான இரண்டு மருந்துக் கொள்வனவு ஒப்பந்தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, தீவிர மற்றும் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு இரத்தச் சுத்திகரிப்பு (Dialysis) சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து அடங்கிய 11 இலட்சம் பைகளை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சையின்போது நோயாளர்களின் உடலில் தேங்கியுள்ள கழிவுப் பொருட்கள் மற்றும் அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுவதற்கு இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.

சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் நடைமுறையின் கீழ் இதற்காக இரண்டு விலைமனுக்கள் கிடைத்துள்ளன. அவற்றை மதிப்பீடு செய்ததுடன், உயர்மட்ட கொள்வனவுக் குழுவின் பரிந்துரைக்கு அமைய, 990 மில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தத்தை இலங்கையைச் சேர்ந்த Infuxion Lanka (Private) Limited நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

குறித்த மருந்துகளை மலேசியாவைச் சேர்ந்த Peritone Health SDN BHD நிறுவனம் உற்பத்தி செய்யவுள்ளது.

இதேவேளை, கிரிப்டோகொக்கல் மூளைக்காய்ச்சல் (Cryptococcal Meningitis) மற்றும் உள்ளுறுப்பு லீஷ்மேனியாசிஸ் (Visceral Leishmaniasis) உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் Liposomal Amphotericin B மருந்தையும் கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, தலா 50 மில்லிகிராம் அளவுடைய 54,000 மருந்துக் குப்பிகளை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்வனவுக்காக சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் நடைமுறையின் கீழ் மூன்று விலைமனுக்கள் கிடைத்துள்ளன. உயர்மட்ட நிரந்தர கொள்வனவுக் குழுவின் பரிந்துரைக்கு அமைய, இந்தியாவைச் சேர்ந்த Gufic Biosciences Ltd நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

702,000 அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தத்தில், விமானப் போக்குவரத்து மூலம் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான செலவு மற்றும் சரக்குக் கட்டணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறித்த மருந்துகளையும் Gufic Biosciences Ltd நிறுவனமே உற்பத்தி செய்யவுள்ளது.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரின் சமர்ப்பிப்புகளுக்கு அமைய, உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்த குறைந்த விலைமனுக்களைச் சமர்ப்பித்த நிறுவனங்களுக்கு இந்த இரண்டு ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு மூன்று கப்பல்களில் எரிவாயுவை இறக்குமதி செய்ய LAUGFS Gas நடவடிக்கை

...

arvoshan.com

இலங்கையில் டிஜிட்டல் சொத்துக்களைப் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்த முடியாது – மத்திய வங்கி ஆளுநர்

...

arvoshan.com

சம்பளம் வழங்கப்படாமைக்கு எதிராக ‘மவ்பிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ ஊடகவியலாளர்கள் போராட்டம்

...

arvoshan.com

TIN இலக்கம் இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்தல், வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தலில் தற்காலிக சலுகை!

...

arvoshan.com

ரத்கம பகுதியில் வெள்ளப் பாதிப்பைக் கட்டுப்படுத்த ரூ.3.38 பில்லியன் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

ABU பொதுக்கூட்டத்துக்கு 10.4 கோடி ரூபாய் அரச நிதி: அமைச்சர் நளிந்த விளக்கம்

...

arvoshan.com

மருத்துவர்களின் கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் போராட்டம் – முக்கிய வைத்தியசாலைகளில் ஆர்ப்பாட்டம் நடத்த GMOA தீர்மானம்!

...

arvoshan.com

சம்பூர் – கப்பல்துறை மின்சார பரிமாற்றத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

...

arvoshan.com

டித்வா புயலால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க ரூ. 3.3 பில்லியன் ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி!

...

arvoshan.com

இலங்கையின் நிலையான வர்த்தகத்தை மேம்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் 10 மில்லியன் யூரோ நிதியுதவி – அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

நீதித்துறையின் சுதந்திரத்திற்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து குரல் கொடுத்தவர் லால் விஜேநாயக்க – சஜித் புகழாரம்

...

arvoshan.com

வவுனியா ஏ9 வீதியின் புனரமைப்புக்கு 1.3 பில்லியன் ரூபா ஒப்பந்தம்

...

arvoshan.com

கிரிஷ் ஒப்பந்த மோசடி வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை – எனினும் தொடர்ந்து விளக்கமறியலில்

...

arvoshan.com

புதிய TIN நடைமுறை: இனி வருமான வரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை!

...

arvoshan.com

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிராகரிப்பு: நாடாளுமன்றத்தில் செங்கோலைக் கைப்பற்ற எதிர்க்கட்சி எம்.பிக்கள் முயற்சி

...