சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிராகரிப்பு: நாடாளுமன்றத்தில் செங்கோலைக் கைப்பற்ற எதிர்க்கட்சி எம்.பிக்கள் முயற்சி

arvloshan.com

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று (03) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நிராகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செங்கோலைக் கைப்பற்ற முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

சபாநாயகருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்ளிட்ட பல்வேறு சிறப்புரிமை தொடர்பான விடயங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முயன்றதைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டது.

இதன்போது, இன்று காலை 9 மணிக்குப் பின்னரே சிறப்புரிமை தொடர்பான சமர்ப்பிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவை இதுவரை பரிசீலனை செய்யப்படவில்லை என்றும் பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் தெரிவித்தார்.

குறித்த சமர்ப்பிப்புகள் ஆராயப்பட்ட பின்னர், இன்று பிற்பகல் அதற்கான பதில் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், நம்பிக்கையில்லாப் பிரேரணை நிராகரிக்கப்பட்டமைக்கான காரணத்தை விளக்குமாறு கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகருக்கு எதிராக 44 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் 50 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த பிரேரணை ஒக்டோபர் 12ஆம் திகதி நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திலும் உள்ளடக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நிலையில், நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் குறித்த பிரேரணை நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர், இந்தத் தீர்மானம் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதுடன், ஜனநாயக நடைமுறைகளையும் பாதிப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

இதனால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலையைத் தொடர்ந்து, பின்னர் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பின.


ஏனைய செய்திகள்

arvoshan.com

நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு மூன்று கப்பல்களில் எரிவாயுவை இறக்குமதி செய்ய LAUGFS Gas நடவடிக்கை

...

arvoshan.com

இலங்கையில் டிஜிட்டல் சொத்துக்களைப் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்த முடியாது – மத்திய வங்கி ஆளுநர்

...

arvoshan.com

சம்பளம் வழங்கப்படாமைக்கு எதிராக ‘மவ்பிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ ஊடகவியலாளர்கள் போராட்டம்

...

arvoshan.com

TIN இலக்கம் இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்தல், வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தலில் தற்காலிக சலுகை!

...

arvoshan.com

ரத்கம பகுதியில் வெள்ளப் பாதிப்பைக் கட்டுப்படுத்த ரூ.3.38 பில்லியன் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

ABU பொதுக்கூட்டத்துக்கு 10.4 கோடி ரூபாய் அரச நிதி: அமைச்சர் நளிந்த விளக்கம்

...

arvoshan.com

மருத்துவர்களின் கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் போராட்டம் – முக்கிய வைத்தியசாலைகளில் ஆர்ப்பாட்டம் நடத்த GMOA தீர்மானம்!

...

arvoshan.com

சம்பூர் – கப்பல்துறை மின்சார பரிமாற்றத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

...

arvoshan.com

சிறுநீரக நோயாளிகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய்களுக்கான மருந்துகள் கொள்வனவு – அமைச்சரவை அங்கீகாரம்

...

arvoshan.com

டித்வா புயலால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க ரூ. 3.3 பில்லியன் ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி!

...

arvoshan.com

இலங்கையின் நிலையான வர்த்தகத்தை மேம்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் 10 மில்லியன் யூரோ நிதியுதவி – அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

நீதித்துறையின் சுதந்திரத்திற்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து குரல் கொடுத்தவர் லால் விஜேநாயக்க – சஜித் புகழாரம்

...

arvoshan.com

வவுனியா ஏ9 வீதியின் புனரமைப்புக்கு 1.3 பில்லியன் ரூபா ஒப்பந்தம்

...

arvoshan.com

கிரிஷ் ஒப்பந்த மோசடி வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை – எனினும் தொடர்ந்து விளக்கமறியலில்

...

arvoshan.com

புதிய TIN நடைமுறை: இனி வருமான வரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை!

...