பம்பலப்பிட்டியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து!
கொழும்பு, பம்பலப்பிட்டி காசில் வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.