நவம்பர் 30ஆம் திகதிக்குள் வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு!
2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026 நவம்பர் 30ஆம் திகதி என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வரி செலுத்துவோருக்கு அறிவித்தல் விடுத்துள்ள திணைக்களம், வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டியவர்கள் குறித்த காலக்கெடுவிற்குள் தமது அறிக்கைகளைச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது தொடர்பான மேலதிக தகவல்கள் அல்லது தெளிவுபடுத்தல்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 1944 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.
மேலும், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான (www.ird.gov.lk) ஊடாகவும் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.