சுரேஷ் சாலேயின் கைது தொடர்பான மனுக்கள் மீதான உத்தரவு ஒத்திவைப்பு
முன்னாள் மாநில புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சாலே, குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தங்களையும் இடைபுகு மனுதாரர்களாகச் சேர்த்துக்கொள்ள அனுமதி கோரும் மனுக்கள் மீதான உத்தரவை எதிர்வரும் அக்டோபர் 22 ஆம் திகதி வரை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தொடர் விசாரணைகளின் அடிப்படையில், சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்தக் கைது மற்றும் தடுப்புக்காவலின் சட்டப்பூர்வ தன்மையை சவாலுக்கு உட்படுத்தி சுரேஷ் சாலே தாக்கல் செய்த வழக்கு விசாரணையில், தாங்களும் தலையிட்டு தங்களது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர் உள்ளிட்ட பல பௌத்த துறவிகள், மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) சார்பில் இடைபுகு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் மீதான உத்தரவு இன்று (14) பிறப்பிக்கப்படவிருந்த நிலையில், அதனை வரும் அக்டோபர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்ற ஆயர் அறிவித்துள்ளது.