அனோஜனின் மரண தண்டனை நீக்கம்: சவூதி அரேபியாவுக்கு ஜனாதிபதி நன்றி!

arvloshan.com

சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தினால் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி, இந்தத் தீர்மானம் அனோஜன் சிவராசா, அவரது குடும்பத்தினர் மற்றும் இந்த வழக்கின் முன்னேற்றத்தைக் கவலையுடன் அவதானித்து வந்த இலங்கை மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொறுமையான இராஜதந்திர அணுகுமுறை, நட்பு நாடொன்றின் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் இலங்கைப் பிரஜைக்கு ஆதரவாகப் பல்வேறு தரப்பினரும் மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தத் தீர்மானம் வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்தை எடுத்த சவூதி அரேபிய அரசாங்கத்துக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளதுடன், இதற்குப் பங்களிப்பு வழங்கிய சவூதி அரேபிய மற்றும் இலங்கை இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் குழுவினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும், எஞ்சியுள்ள சட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அனோஜன் சிவராசாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

“வாழ்வாதாரத்தைத் தேடி நாட்டை விட்டுச் செல்லும் எந்தவொரு இலங்கையரும் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக ஒருபோதும் உணரக்கூடாது” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் இலங்கைப் பிரஜைகளுக்கு ஆதரவளிப்பதில் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

முள்ளம்பன்றி இறைச்சி, சட்டவிரோத துப்பாக்கிகளுடன் நால்வர் கைது!

...

arvoshan.com

23,000 பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதியானோர் பட்டியல் வெளியீடு

...

arvoshan.com

நவம்பர் 30ஆம் திகதிக்குள் வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு!

...

arvoshan.com

சிறைச்சாலைக்கு வெளியே செல்லும்போது பௌத்த பிக்குகள் காவியுடை அணிய அனுமதி – புதிய விதிமுறைகள் முன்மொழிவு

...

arvoshan.com

அமைச்சு வழங்கிய இரு வாகனங்களும் பழுது – நண்பரின் வாகனத்தைப் பயன்படுத்த நேரிட்டது: அமைச்சர் லால் காந்த

...

arvoshan.com

2027 வரவு – செலவுத் திட்டத்தில் ‘இரண்டாவது வாய்ப்பு’ கடன் திட்டம்: ஜனாதிபதியிடம் நாமல் ராஜபக்ச கோரிக்கை

...

arvoshan.com

பம்பலப்பிட்டியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து!

...

arvoshan.com

கிரியெல்லவின் கருத்துகளுக்கு மனோ கணேசன் அதிருப்தி: சஜித் பிரேமதாசவிற்கு அவசரக் கடிதம்

...

arvoshan.com

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை: பொதுஜன பெரமுன தகவல்

...

arvoshan.com

ஞானசார தேரரின் சிறை ஆடை விவகாரம்: கம்மன்பிலவின் குற்றச்சாட்டுகளை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுப்பு

...

arvoshan.com

சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள் குறித்து இலங்கைக் காவல்துறை கடுமையான எச்சரிக்கை!

...

arvoshan.com

சிறை வைக்கப்பட்ட மதத் தலைவர்களின் ஆடைகள் தொடர்பாக குழு நியமிக்கும் அரசின் முடிவுக்கு ஐ.தே.க. கடும் கண்டனம்!

...

arvoshan.com

சவூதியில் அனோஜனின் மரண தண்டனை ரத்து: சாணக்கியன் வரவேற்பு!

...

arvoshan.com

ஞானசார தேரரின் காவி உடை வழக்கு: மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி விலகல்

...

arvoshan.com

சுரேஷ் சாலேயின் கைது தொடர்பான மனுக்கள் மீதான உத்தரவு ஒத்திவைப்பு

...