முள்ளம்பன்றி இறைச்சி, சட்டவிரோத துப்பாக்கிகளுடன் நால்வர் கைது!

arvloshan.com

மதுரு ஓயா தேசிய பூங்காவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது, முள்ளம்பன்றி இறைச்சி மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளுடன் நால்வர் உட்பட பல சந்தேகநபர்கள் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரு ஓயா தேசிய பூங்காவுடன் இணைந்த கண்டேகம வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின்போதே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

தேசிய பூங்காவிற்குள் வழக்கமான ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான சில நபர்களைக் கண்டுள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட துரத்தல் நடவடிக்கையின்போது, வேட்டையாடியதாகச் சந்தேகிக்கப்படும் நால்வர் முள்ளம்பன்றி இறைச்சியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது, தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேநாளில், தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோத வேட்டையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து வேட்டையாடப்பட்ட நிலையில் இருந்த மரை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, ஒவ்வொரு சந்தேகநபருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான தனிப்பட்ட பிணை வழங்கி விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

23,000 பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதியானோர் பட்டியல் வெளியீடு

...

arvoshan.com

நவம்பர் 30ஆம் திகதிக்குள் வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு!

...

arvoshan.com

சிறைச்சாலைக்கு வெளியே செல்லும்போது பௌத்த பிக்குகள் காவியுடை அணிய அனுமதி – புதிய விதிமுறைகள் முன்மொழிவு

...

arvoshan.com

அமைச்சு வழங்கிய இரு வாகனங்களும் பழுது – நண்பரின் வாகனத்தைப் பயன்படுத்த நேரிட்டது: அமைச்சர் லால் காந்த

...

arvoshan.com

2027 வரவு – செலவுத் திட்டத்தில் ‘இரண்டாவது வாய்ப்பு’ கடன் திட்டம்: ஜனாதிபதியிடம் நாமல் ராஜபக்ச கோரிக்கை

...

arvoshan.com

அனோஜனின் மரண தண்டனை நீக்கம்: சவூதி அரேபியாவுக்கு ஜனாதிபதி நன்றி!

...

arvoshan.com

பம்பலப்பிட்டியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து!

...

arvoshan.com

கிரியெல்லவின் கருத்துகளுக்கு மனோ கணேசன் அதிருப்தி: சஜித் பிரேமதாசவிற்கு அவசரக் கடிதம்

...

arvoshan.com

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை: பொதுஜன பெரமுன தகவல்

...

arvoshan.com

ஞானசார தேரரின் சிறை ஆடை விவகாரம்: கம்மன்பிலவின் குற்றச்சாட்டுகளை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுப்பு

...

arvoshan.com

சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள் குறித்து இலங்கைக் காவல்துறை கடுமையான எச்சரிக்கை!

...

arvoshan.com

சிறை வைக்கப்பட்ட மதத் தலைவர்களின் ஆடைகள் தொடர்பாக குழு நியமிக்கும் அரசின் முடிவுக்கு ஐ.தே.க. கடும் கண்டனம்!

...

arvoshan.com

சவூதியில் அனோஜனின் மரண தண்டனை ரத்து: சாணக்கியன் வரவேற்பு!

...

arvoshan.com

ஞானசார தேரரின் காவி உடை வழக்கு: மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி விலகல்

...

arvoshan.com

சுரேஷ் சாலேயின் கைது தொடர்பான மனுக்கள் மீதான உத்தரவு ஒத்திவைப்பு

...