பசில் ராஜபக்‌ஷவை கைது செய்ய இன்டர்போல் உதவி நாடல்

arvloshan.com

முன்னாள் நிதியமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்‌ஷவிற்கு எதிராக நீல அறிவித்தல் ஒன்றை விடுக்குமாறு இலங்கை பொலிஸார், சர்வதேச பொலிஸ் அமைப்பிடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது இலங்கையில் இல்லாத பசில் ராஜபக்‌ஷ தொடர்பில் தகவல்களைத் திரட்டும் நோக்கிலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸாரின் இக்கோரிக்கையைத் தொடர்ந்து, மேலதிக தகவல்களை வழங்குமாறு சர்வதேச பொலிஸ் அமைப்பு கேட்டுள்ளதாகவும், அதற்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகளில் இலங்கை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

பசில் ராஜபக்‌ஷவிற்கு எதிராக தற்போது நீதிமன்றத்தினால் இரண்டு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்குகளின் பின்னணி:

மாத்தறை காணி விவகாரம்: மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட நிதியைப் பயன்படுத்தி 1.5 ஏக்கர் காணியைக் கொள்வனவு செய்தமை தொடர்பான குற்றச்சாட்டு.

சுற்றுலாப் பணியக நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை: ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்தி 12,000 ரீ-ஷர்ட்டுகளை விநியோகித்தமை தொடர்பான குற்றச்சாட்டு.

இவ்விரு வழக்குகள் தொடர்பிலேயே அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் உதவியை இலங்கை அதிகாரிகள் நாடியுள்ளனர்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

தற்போதைய பாதாள உலகத் தலைவர்கள் ராஜபக்ஷ ஆட்சியில் உருவானவர்களே: சரத் பொன்சேகா

...

arvoshan.com

மானிப்பாயில் பொலிஸார் வழிமறித்தபோது இளைஞன் திடீர் உயிரிழப்பு!

...

arvoshan.com

ஹட்டனில் குப்பை மீள்சுழற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு: பெருந்தோட்ட மக்கள் போராட்டம்

...

arvoshan.com

எளிய முறையில் வீடு கட்ட தருவதாக மோசடி: கைதான இரு பெண்கள் விளக்கமறியலில் வைப்பு!

...

arvoshan.com

சவூதியில் இலங்கைத் தொழிலாளிக்கு மரண தண்டனை?: சஜித் கருணை கோரிக்கை

...

arvoshan.com

திருகோணமலை கொள்ளைச் சம்பவம்: இருவர் ஒரு மணி நேரத்திற்குள் கைது

...

arvoshan.com

மோட்டார் வாகனப் பிரச்சினைகளுக்காக புதிய வாட்ஸ்அப் அவசர இலக்கம் அறிமுகம்

...

arvoshan.com

சவூதி மரண தண்டனை வழக்கு: பிரதமர் மோடியின் உதவியைக் கோருமாறு மனோ கணேசன் வேண்டுகோள்

...

arvoshan.com

“15 மணித்தியாலம் உழைத்தேன்; காணிகளையும் விற்றேன்”: சந்திரிக்கா நெகிழ்ச்சி

...

arvoshan.com

கடுமையான மின்னல் அபாயம்: 09 மாவட்டங்களுக்கு 'சிவப்பு எச்சரிக்கை'விடுப்பு

...

arvoshan.com

திருகோணமலை மதுபானசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளை: இருவர் கைது!

...

arvoshan.com

ஒவ்வொரு வகுப்பறைக்கும் 'ஸ்மார்ட் போர்ட்' வழங்கப்படமாட்டாது: பிரதமர் ஹரிணி அமரசூரிய திட்டவட்டம்

...

arvoshan.com

முல்லைத்தீவில் நவீன தபால் அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறப்பு

...

arvoshan.com

சமூக ஊடகப் பிரச்சாரங்கள் குறித்து எச்சரிக்கை!: நுகர்வோர் அதிகாரசபை

...

arvoshan.com

டெலிகிராம் மூலம் இணையவழி நிதி மோசடி: படுவத்த பகுதியில் பெண் கைது!

...