தெற்கு சூடானில் மீண்டும் வன்முறை: 7 சிறுவர்கள் உட்பட 24 பொதுமக்கள் பலி

arvloshan.com

தெற்கு சூடானில் எதிர்க்கட்சிப் படையினர் நடத்திய தாக்குதலில் ஏழு சிறுவர்கள் உட்பட 24 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இடம்பெற்ற இந்தத் தாக்குதல், நாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள வார்்ராப் மாநிலத்தின் டொன்ஜ் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட போல் போல் போமா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அண்டை மாநிலமான யூனிட்டி மாநிலத்திலிருந்து வந்த தாக்குதலாளர்கள், முன்னாள் துணை ஜனாதிபதி ரியக் மச்சாருக்கு ஆதரவான SPLA-IO படையினரைச் சேர்ந்தவர்கள் என டொன்ஜ் கிழக்கு மாவட்டத்தின் பதில் ஆணையாளர் மச்சுய் பித் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் கால்நடை மேய்ப்பவர்கள் உள்ளிட்ட 24 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஏழு சிறுவர்களும் ஆறு பெண்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், SPLA-IO படையினரின் சீருடை அணிந்திருந்த நான்கு ஆயுததாரிகளும் கொல்லப்பட்டுள்ளதாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ள உள்ளூர் பொலிஸ் அதிகாரி ஒருவர், சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு விசாரணைக் குழுவொன்று அனுப்பப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கடந்த வாரம் வார்்ராப் மாநிலத்தின் இரு மாவட்டங்களைச் சேர்ந்த குழுக்களுக்கிடையில் மகுவாக் நகரிலுள்ள சந்தையில் ஏற்பட்ட மோதலில் 17 பேர் கொல்லப்பட்டதுடன், 23 பேர் காயமடைந்தனர்.

அதேபோன்று, கடந்த மாதம் வார்்ராப் மற்றும் யூனிட்டி மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற சமூகங்களுக்கு இடையிலான வன்முறையில் குறைந்தது 72 பேர் உயிரிழந்தனர்.

கால்நடைகளைக் கொள்ளையிடுதல், பழிவாங்கும் கொலைகள் மற்றும் பிரதேசங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான மோதல்கள் காரணமாக இந்தப் பிராந்தியம் பல ஆண்டுகளாக வன்முறைச் சுழற்சியில் சிக்கியுள்ளது. ஆயுதப் புழக்கம் அதிகரித்துள்ளமை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

2011ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற உலகின் இளைய நாடான தெற்கு சூடான், 2013 முதல் 2018ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி சல்வா கீர் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி ரியக் மச்சார் ஆகியோருக்கு ஆதரவான படைகளுக்கு இடையிலான உள்நாட்டுப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தப் போரில் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் துணை ஜனாதிபதி ரியக் மச்சாருக்கு ஆதரவான படைகளுக்கும், ஜனாதிபதி சல்வா கீருக்கு விசுவாசமான படைகளுக்கும் இடையிலான மோதல்கள் அண்மைய மாதங்களில் தீவிரமடைந்துள்ளன.

இதனால், நாட்டின் பல பகுதிகளில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஏனைய செய்திகள்

arvoshan.com

ட்ரம்ப்புடனான சந்திப்பை நிராகரித்த பின்னணியில், இறைமையைப் பாதுகாத்து வெளிநாட்டு உறவுகளை விரிவுபடுத்துவோம் – கிம் ஜாங் உன்

...

arvoshan.com

இந்தோனேசியா தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழப்பு 24 ஆக அதிகரிப்பு – பலர் மாயம்

...

arvoshan.com

ஜிம்பாப்வே மதபோதகர் யூபர்ட் ஏஞ்சல் பாலியல் குற்றச்சாட்டில் கைது

...

arvoshan.com

நியூயோர்க் மாநில செனட் வரலாற்றில் முதல் பலஸ்தீனப் பெண்! அபர் கவாஸ் வரலாற்றுச் சாதனை

...

arvoshan.com

வெளிநாடுகளில் AI தரவு மையங்களை அமைக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை

...

arvoshan.com

ஐரோப்பாவில் BYD நிறுவனத்தின் புதிய Ti7 SUV விற்பனைக்குத் தடை – லேண்ட் ரோவர் டிஃபென்டருடன் வடிவமைப்பு ஒற்றுமையே காரணம்!

...

arvoshan.com

ஏர்பேக் வெடிக்கும் அபாயம்: அமெரிக்காவில் 3.14 இலட்சத்துக்கும் அதிகமான டொயோட்டா, லெக்ஸஸ் வாகனங்கள் மீளப்பெறப்படுகின்றன!

...

arvoshan.com

அமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையப் பாதுகாப்புத் தலைவர் மாற்றம்!

...

arvoshan.com

காசா பகுதியில் ஹமாஸ் சுரங்கத்தை அழிக்கும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை நிறைவு

...

arvoshan.com

ஐ.நா. சீர்திருத்தம், எரிபொருள் விநியோகம், அணுவாயுதக் கட்டுப்பாடு: ட்ரம்ப், ஸீ ஜின்பிங், புதின் பேச்சுவார்த்தை

...

arvoshan.com

ஹூதி ஏவுகணைத் தாக்குதல்: சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உயரமான கட்டடம் சேதம்

...

arvoshan.com

ஐ.நா. வாக்கெடுப்பில் அமெரிக்கா நடுநிலை; இலங்கை ஆதரவு

...

arvoshan.com

ட்ரம்ப்பை படுகொலை செய்யத் திட்டம் – பாகிஸ்தான் நபருக்கு அமெரிக்காவில் 27 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை!

...

arvoshan.com

பாதுகாப்பு அச்சுறுத்தல்: சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளை நவம்பர் 30 வரை இடைநிறுத்தியுள்ள முன்னணி விமான நிறுவனங்கள்

...

arvoshan.com

அயர்லாந்து விமான நிலையத்தில் 60 மில்லியன் டொலர் அமெரிக்க இராணுவ விமானத்தை சேதப்படுத்திய நபர்

...