வெளிநாடுகளில் AI தரவு மையங்களை அமைக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை

arvloshan.com

செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்களை அமெரிக்காவுக்கு வெளியே அமைக்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிக அதிகளவிலான வரிகள் மற்றும் அபராதங்கள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் தரவு மையங்களை அமைப்பதை அனுமதிக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டார்.

அவ்வாறு அனுமதித்தால் சீனா அவற்றைக் கைப்பற்றும் அபாயம் இருப்பதாகவும், இதனைத் தடுப்பதற்காக வெளிநாடுகளில் தரவு மையங்களை அமைக்க முயற்சிக்கும் நிறுவனங்களுக்கு பாரிய தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், இந்தக் கொள்கையை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பான விபரங்களை அவர் வெளியிடவில்லை. மேலும், இந்தத் திட்டம் குறித்து தனது நிர்வாக அதிகாரிகளிடம்கூட இதுவரை கலந்துரையாடவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் தரவு மையங்களை அமைப்பதற்கு உள்ளூர் சமூகங்கள் எதிர்ப்புத் தெரிவிக்காமல், அதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் ட்ரம்ப் வலியுறுத்தினார்.

தரவு மையங்களை அமைக்கும் நிறுவனங்களிடம் இருந்து உள்ளூர் சமூகங்களுக்கான நிதிப் பங்களிப்புகள் மற்றும் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவற்றின் கட்டுமானப் பணிகளைத் தடுக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கும் அமெரிக்காவின் எரிசக்தி உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், மின் உற்பத்தி நிலையங்கள், மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்புகள் உள்ளிட்ட திட்டங்களுக்கான அனுமதி நடைமுறைகளை விரைவுபடுத்தும் இருகட்சிகளின் ஆதரவுடனான சட்டமூலத்தை அமெரிக்க செனட் சபை வியாழக்கிழமை நிறைவேற்றியது.

இந்தச் சட்டமூலம் பெரிய அளவிலான எரிசக்தித் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான கால அவகாசத்தைக் குறைப்பதுடன், தரவு மையங்கள் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கும், மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்குமான செலவுகளை ஏற்கும் வகையிலும் ஏற்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.

செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டமூலம் அடுத்தகட்டமாக பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளது.

இந்தச் சட்டமூலத்தைப் பாராட்டிய ட்ரம்ப், இதன் மூலம் அமெரிக்காவில் பாரிய அளவிலான புதிய கட்டுமானத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு ட்ரம்ப் ஆதரவளித்து வந்தாலும், AI நிறுவனங்கள் மற்றும் தரவு மையங்களை உருவாக்கும் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் மேலும் கடுமையடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AI தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கும் தரவு மையங்களின் அதிகரிப்பு, அவற்றின் மின்சாரப் பயன்பாடு மற்றும் உள்ளூர் சமூகங்கள் மீதான தாக்கம் காரணமாக அமெரிக்காவில் அரசியல் ரீதியான சர்ச்சைகளும் அதிகரித்து வருகின்றன.


ஏனைய செய்திகள்

arvoshan.com

ஐரோப்பாவில் BYD நிறுவனத்தின் புதிய Ti7 SUV விற்பனைக்குத் தடை – லேண்ட் ரோவர் டிஃபென்டருடன் வடிவமைப்பு ஒற்றுமையே காரணம்!

...

arvoshan.com

ஏர்பேக் வெடிக்கும் அபாயம்: அமெரிக்காவில் 3.14 இலட்சத்துக்கும் அதிகமான டொயோட்டா, லெக்ஸஸ் வாகனங்கள் மீளப்பெறப்படுகின்றன!

...

arvoshan.com

அமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையப் பாதுகாப்புத் தலைவர் மாற்றம்!

...

arvoshan.com

காசா பகுதியில் ஹமாஸ் சுரங்கத்தை அழிக்கும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை நிறைவு

...

arvoshan.com

ஐ.நா. சீர்திருத்தம், எரிபொருள் விநியோகம், அணுவாயுதக் கட்டுப்பாடு: ட்ரம்ப், ஸீ ஜின்பிங், புதின் பேச்சுவார்த்தை

...

arvoshan.com

ஹூதி ஏவுகணைத் தாக்குதல்: சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உயரமான கட்டடம் சேதம்

...

arvoshan.com

ஐ.நா. வாக்கெடுப்பில் அமெரிக்கா நடுநிலை; இலங்கை ஆதரவு

...

arvoshan.com

ட்ரம்ப்பை படுகொலை செய்யத் திட்டம் – பாகிஸ்தான் நபருக்கு அமெரிக்காவில் 27 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை!

...

arvoshan.com

பாதுகாப்பு அச்சுறுத்தல்: சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளை நவம்பர் 30 வரை இடைநிறுத்தியுள்ள முன்னணி விமான நிறுவனங்கள்

...

arvoshan.com

அயர்லாந்து விமான நிலையத்தில் 60 மில்லியன் டொலர் அமெரிக்க இராணுவ விமானத்தை சேதப்படுத்திய நபர்

...

arvoshan.com

அமெரிக்காவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான ஹோண்டா வாகனங்கள் தொடர்பில் விசாரணை!

...

arvoshan.com

ஜெப்ரி எப்ஸ்டீன் தற்கொலை செய்யவில்லை; கொலை செய்யப்பட்டிருக்கலாம் – தடயவியல் நிபுணர்கள் புதிய தகவல்

...

arvoshan.com

ஆசியப் பயணத்தை ஆரம்பித்தார் டொனால்ட் ட்ரம்ப் – பிலிப்பைன்ஸில் பொருளாதார ஒப்பந்தங்கள், நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை

...

arvoshan.com

அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் திடீர் சேவைத் தடை – ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிப்பு!

...

arvoshan.com

திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு முன்னுரிமை – கனடா அறிவிப்பு!

...