இந்தோனேசியா தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழப்பு 24 ஆக அதிகரிப்பு – பலர் மாயம்

arvloshan.com

இந்தோனேசியாவின் செராங் மாவட்டம், சிகாண்டே பகுதியில் அமைந்துள்ள இனிப்புத் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (21) இடம்பெற்ற இந்தத் தீ விபத்தில், இதுவரை 24 சடலப் பைகள் மீட்கப்பட்டுள்ளதாக பான்டென் மாகாண தேடுதல் மற்றும் மீட்புப் பணியகத்தின் தலைவர் அல் அம்ராட் தெரிவித்துள்ளார். மேலும், சுமார் 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, விபத்தில் பாதிக்கப்பட்ட 65 பணியாளர்களில் 24 பேர் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர். நால்வர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 29 பேர் காணாமல் போயுள்ளதுடன், எஞ்சிய எட்டுப் பேரின் நிலைமை தொடர்பான தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

தீயின் தீவிரம் காரணமாக மீட்கப்பட்ட சடலங்களை நேரடியாகப் பார்த்து அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் அனர்த்த உயிரிழப்புகள் அடையாளப் பிரிவின் அதிகாரி வஹ்யு ஹிதாயதி தெரிவித்துள்ளார்.

ஒரு சடலப் பையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் உடற்பாகங்கள் இருக்கக்கூடும் என்பதால், காணாமல் போனவர்களின் உறவினர்களிடமிருந்து டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிக்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை ஆகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குளிரூட்டும் இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

15 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நீர்த்தாரை வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், தொழிற்சாலையின் மத்திய மற்றும் பின்புறப் பகுதிகளில் தொடர்ந்து வெப்பம் காணப்படுவதால் குளிரூட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், கட்டடத்தின் பல பகுதிகள் இடிந்து விழும் அபாயம் காணப்படுவதால், மீட்புப் பணியாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

யுனைடெட் ஃபேமிலி ஃபுட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்தத் தொழிற்சாலையில், தீ விபத்து ஏற்பட்டபோது சுமார் 300 பேர் பணியில் இருந்ததாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவன் எர்வின் விஜயா தெரிவித்துள்ளார்.

மேலும், தொழிற்சாலையில் தீத்தடுப்பு ஏற்பாடுகளும் அவசரகால வெளியேற்ற வழிகளும் முறையாகப் பராமரிக்கப்பட்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது. இதற்காக தொழிற்சாலையின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு அழைப்பாணை விடுக்கப்படவுள்ளதாக இந்தோனேசிய ஜனாதிபதியின் தொழிலாளர் விவகார ஆலோசகர் சயீத் இக்பால் தெரிவித்துள்ளார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

ட்ரம்ப்புடனான சந்திப்பை நிராகரித்த பின்னணியில், இறைமையைப் பாதுகாத்து வெளிநாட்டு உறவுகளை விரிவுபடுத்துவோம் – கிம் ஜாங் உன்

...

arvoshan.com

தெற்கு சூடானில் மீண்டும் வன்முறை: 7 சிறுவர்கள் உட்பட 24 பொதுமக்கள் பலி

...

arvoshan.com

ஜிம்பாப்வே மதபோதகர் யூபர்ட் ஏஞ்சல் பாலியல் குற்றச்சாட்டில் கைது

...

arvoshan.com

நியூயோர்க் மாநில செனட் வரலாற்றில் முதல் பலஸ்தீனப் பெண்! அபர் கவாஸ் வரலாற்றுச் சாதனை

...

arvoshan.com

வெளிநாடுகளில் AI தரவு மையங்களை அமைக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை

...

arvoshan.com

ஐரோப்பாவில் BYD நிறுவனத்தின் புதிய Ti7 SUV விற்பனைக்குத் தடை – லேண்ட் ரோவர் டிஃபென்டருடன் வடிவமைப்பு ஒற்றுமையே காரணம்!

...

arvoshan.com

ஏர்பேக் வெடிக்கும் அபாயம்: அமெரிக்காவில் 3.14 இலட்சத்துக்கும் அதிகமான டொயோட்டா, லெக்ஸஸ் வாகனங்கள் மீளப்பெறப்படுகின்றன!

...

arvoshan.com

அமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையப் பாதுகாப்புத் தலைவர் மாற்றம்!

...

arvoshan.com

காசா பகுதியில் ஹமாஸ் சுரங்கத்தை அழிக்கும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை நிறைவு

...

arvoshan.com

ஐ.நா. சீர்திருத்தம், எரிபொருள் விநியோகம், அணுவாயுதக் கட்டுப்பாடு: ட்ரம்ப், ஸீ ஜின்பிங், புதின் பேச்சுவார்த்தை

...

arvoshan.com

ஹூதி ஏவுகணைத் தாக்குதல்: சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உயரமான கட்டடம் சேதம்

...

arvoshan.com

ஐ.நா. வாக்கெடுப்பில் அமெரிக்கா நடுநிலை; இலங்கை ஆதரவு

...

arvoshan.com

ட்ரம்ப்பை படுகொலை செய்யத் திட்டம் – பாகிஸ்தான் நபருக்கு அமெரிக்காவில் 27 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை!

...

arvoshan.com

பாதுகாப்பு அச்சுறுத்தல்: சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளை நவம்பர் 30 வரை இடைநிறுத்தியுள்ள முன்னணி விமான நிறுவனங்கள்

...

arvoshan.com

அயர்லாந்து விமான நிலையத்தில் 60 மில்லியன் டொலர் அமெரிக்க இராணுவ விமானத்தை சேதப்படுத்திய நபர்

...