ட்ரம்ப்பை படுகொலை செய்யத் திட்டம் – பாகிஸ்தான் நபருக்கு அமெரிக்காவில் 27 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை!

arvloshan.com

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை படுகொலை செய்யத் திட்டமிட்ட குற்றச்சாட்டில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிப் மெர்ச்சன்ட் என்பவருக்கு 27 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புரட்சிகர காவல்படைத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தப் படுகொலைத் திட்டம் தீட்டப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை புரூக்ளின் நீதிமன்றத்தினால் அவருக்கு 330 மாதங்கள், அதாவது 27 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஈரானுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஆசிப் மெர்ச்சன்ட், அமெரிக்காவில் அரசியல்வாதி அல்லது அரசாங்க அதிகாரி ஒருவரைப் படுகொலை செய்வதற்காக கூலிப்படையினரைப் பணியமர்த்த முயற்சித்ததாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் வெளிநாட்டு இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான தளபதியாக இருந்த காசிம் சுலைமானி, 2020 ஜனவரி மாதம் ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்குப் பழிவாங்குவதாக ஈரானிய அதிகாரிகள் பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தனது குடும்பத்தினரைப் பாதுகாப்பதற்காகவே இந்தத் திட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஆசிப் மெர்ச்சன்ட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், எவரும் கொல்லப்படுவதற்கு முன்னரே தான் கைது செய்யப்படுவேன் என எதிர்பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட ஒருவரைக் கொலை செய்யுமாறு தனக்கு உத்தரவிடப்படவில்லை என்றும், ஆனால் தனது ஈரானிய தொடர்பாளர் மூன்று பேரின் பெயர்களைக் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்களில் டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி ஆகியோர் அடங்குவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்தப் படுகொலைச் சதித்திட்டம் ட்ரம்ப்பை இலக்காகக் கொண்டதே என அமெரிக்க நீதித்துறையின் தலைமை அதிகாரி டோட் பிளான்ச் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தலைவர்களுக்கு எதிரான வெளிநாட்டு பயங்கரவாதச் சதித்திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், இதற்குப் பொறுப்பான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் வரை நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிப் மெர்ச்சன்ட் கடந்த 2024 ஜூலை 12ஆம் திகதி அமெரிக்காவிலிருந்து வெளியேறத் திட்டமிட்டிருந்தபோது கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

காசா பகுதியில் ஹமாஸ் சுரங்கத்தை அழிக்கும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை நிறைவு

...

arvoshan.com

ஐ.நா. சீர்திருத்தம், எரிபொருள் விநியோகம், அணுவாயுதக் கட்டுப்பாடு: ட்ரம்ப், ஸீ ஜின்பிங், புதின் பேச்சுவார்த்தை

...

arvoshan.com

ஹூதி ஏவுகணைத் தாக்குதல்: சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உயரமான கட்டடம் சேதம்

...

arvoshan.com

ஐ.நா. வாக்கெடுப்பில் அமெரிக்கா நடுநிலை; இலங்கை ஆதரவு

...

arvoshan.com

பாதுகாப்பு அச்சுறுத்தல்: சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளை நவம்பர் 30 வரை இடைநிறுத்தியுள்ள முன்னணி விமான நிறுவனங்கள்

...

arvoshan.com

அயர்லாந்து விமான நிலையத்தில் 60 மில்லியன் டொலர் அமெரிக்க இராணுவ விமானத்தை சேதப்படுத்திய நபர்

...

arvoshan.com

அமெரிக்காவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான ஹோண்டா வாகனங்கள் தொடர்பில் விசாரணை!

...

arvoshan.com

ஜெப்ரி எப்ஸ்டீன் தற்கொலை செய்யவில்லை; கொலை செய்யப்பட்டிருக்கலாம் – தடயவியல் நிபுணர்கள் புதிய தகவல்

...

arvoshan.com

ஆசியப் பயணத்தை ஆரம்பித்தார் டொனால்ட் ட்ரம்ப் – பிலிப்பைன்ஸில் பொருளாதார ஒப்பந்தங்கள், நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை

...

arvoshan.com

அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் திடீர் சேவைத் தடை – ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிப்பு!

...

arvoshan.com

திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு முன்னுரிமை – கனடா அறிவிப்பு!

...

arvoshan.com

தென்னாப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 17 பேர் உயிரிழப்பு!

...

arvoshan.com

மத்திய கிழக்கிற்கு வந்தடைந்தது அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கிப் போர்க்கப்பல்

...

arvoshan.com

இரண்டு நாட்களில் 2,200க்கும் மேற்பட்ட குடியேறிகள் கேனரி தீவுகளை வந்தடைந்தனர்!

...

arvoshan.com

நைஜீரியாவில் 33.95 கிலோ கஞ்சாவுடன் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கைது!

...