காங்கேசன்துறையில் 187 ஏக்கர் காணி விடுவிப்பு: மாவட்டச் செயலகத்திடம் ஆவணங்கள் ஒப்படைப்பு!

arvloshan.com

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 187.56 ஏக்கர் காணி, பாதுகாப்புப் படையினரால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் டபிள்யூ.எம்.ஏ.எம். நிசங்கவினால், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் யாழ். மாவட்டச் செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

காங்கேசன்துறைப் பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள முதலீட்டு வலயத்திற்காக , ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் 351.23 ஏக்கர் அரச காணி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தற்பொழுது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு முதலீட்டு வலயத்திற்காகப் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பிற்குள்ளேயே, பாதுகாப்புப் படையினரால் தற்போது விடுவிக்கப்பட்ட இந்த 187.56 ஏக்கர் காணியும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன் மற்றும் இராணுவத்தின் மேஜர் டபிள்யூ.எம்.கே.கே. வீரக்கோன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

மன்னார் மடு வீதியில் சிறுத்தை புலிகளின் நடமாட்டம்: எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு மக்களுக்கு கோரிக்கை

...

arvoshan.com

அபாயகரமான வேலைகளில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் ரூ. 100,000 அபராதம்: பிரதமர் அறிவிப்பு

...

arvoshan.com

அஹங்கல்லவில் லோக்கு பெட்டியின் தம்பி மீது துப்பாக்கிச்சூடு: படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

...

arvoshan.com

கற்பிட்டியில் அரிதான கடல் சங்குகளுடன் சந்தேகநபர் கைது

...

arvoshan.com

முக்கிய மதத்தலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: 21 வயது இளைஞர் விளக்கமறியலில்!

...

arvoshan.com

ரணில் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்: ஒளிப்பதிவாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

...

arvoshan.com

டீசல் லீட்டர் 528 ரூபா; விற்பனை 392 ரூபாவிற்கு: CPC தலைவர்

...

arvoshan.com

பலமான அரசியல் கட்சிகளை உருவாக்க கவிந்த ஜயவர்தன அழைப்பு

...

arvoshan.com

13 மாவட்டங்களுக்கு 'எச்சரிக்கை மட்ட' வெப்ப அலை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

...

arvoshan.com

அநுராதபுர புனித நகர அபிவிருத்தி திட்டத்திற்கு 7.7 பில்லியன் ரூபா இந்திய நிதி உதவி

...

arvoshan.com

அரிசி எனக் கூறி இரும்பு ஏற்றுமதி செய்ய முயற்சி: சுங்கப் பிரிவினரின் அதிரடி நடவடிக்கை

...

arvoshan.com

இந்தியாவில் $19 பில்லியன் மதிப்பிலான பசுமை ஆற்றல் திட்டத்திற்கு ஒப்புதல்

...

arvoshan.com

அதிக விலைக்கு குடிநீர் விற்பனை: பம்பலப்பிட்டி உணவகத்திற்கு 10 இலட்சம் அபராதம்

...

arvoshan.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கோட்டாபயவின் மனுவை நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

...

arvoshan.com

ரணிலின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்: தனியார் ஊடக ஒளிப்பதிவாளர் கைது!

...