ரணிலின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்: தனியார் ஊடக ஒளிப்பதிவாளர் கைது!

arvloshan.com

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தனியார் ஊடக நிறுவனம் ஒன்றின் ஒளிப்பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நேற்று (செப்டம்பர் 30) இடம்பெற்ற நீதிமன்ற விவகாரங்களின்போது இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று விடுக்கப்பட்ட அழைப்பானைக்கமைய (Summons), வழக்கறிஞர் ஒருவருடன் இன்று (அக்டோபர் 01) கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தபோதே குறித்த ஒளிப்பதிவாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களால் பதிவு செய்யப்பட்ட காணொளியில், பொலிஸ் பிரமுகர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரை குறித்த ஒளிப்பதிவாளர் தனது கேமராவால் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக்காணொளி சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

இச்சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்புப் பிரிவு அதிகாரி நாரஹேன்பிட்டியிலுள்ள பொலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

மன்னார் மடு வீதியில் சிறுத்தை புலிகளின் நடமாட்டம்: எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு மக்களுக்கு கோரிக்கை

...

arvoshan.com

காங்கேசன்துறையில் 187 ஏக்கர் காணி விடுவிப்பு: மாவட்டச் செயலகத்திடம் ஆவணங்கள் ஒப்படைப்பு!

...

arvoshan.com

அபாயகரமான வேலைகளில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் ரூ. 100,000 அபராதம்: பிரதமர் அறிவிப்பு

...

arvoshan.com

அஹங்கல்லவில் லோக்கு பெட்டியின் தம்பி மீது துப்பாக்கிச்சூடு: படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

...

arvoshan.com

கற்பிட்டியில் அரிதான கடல் சங்குகளுடன் சந்தேகநபர் கைது

...

arvoshan.com

முக்கிய மதத்தலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: 21 வயது இளைஞர் விளக்கமறியலில்!

...

arvoshan.com

ரணில் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்: ஒளிப்பதிவாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

...

arvoshan.com

டீசல் லீட்டர் 528 ரூபா; விற்பனை 392 ரூபாவிற்கு: CPC தலைவர்

...

arvoshan.com

பலமான அரசியல் கட்சிகளை உருவாக்க கவிந்த ஜயவர்தன அழைப்பு

...

arvoshan.com

13 மாவட்டங்களுக்கு 'எச்சரிக்கை மட்ட' வெப்ப அலை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

...

arvoshan.com

அநுராதபுர புனித நகர அபிவிருத்தி திட்டத்திற்கு 7.7 பில்லியன் ரூபா இந்திய நிதி உதவி

...

arvoshan.com

அரிசி எனக் கூறி இரும்பு ஏற்றுமதி செய்ய முயற்சி: சுங்கப் பிரிவினரின் அதிரடி நடவடிக்கை

...

arvoshan.com

இந்தியாவில் $19 பில்லியன் மதிப்பிலான பசுமை ஆற்றல் திட்டத்திற்கு ஒப்புதல்

...

arvoshan.com

அதிக விலைக்கு குடிநீர் விற்பனை: பம்பலப்பிட்டி உணவகத்திற்கு 10 இலட்சம் அபராதம்

...

arvoshan.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கோட்டாபயவின் மனுவை நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

...