அநுராதபுர புனித நகர அபிவிருத்தி திட்டத்திற்கு 7.7 பில்லியன் ரூபா இந்திய நிதி உதவி

arvloshan.com

அநுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கான 7.7 பில்லியன் ரூபா மதிப்பீட்டைக் கொண்ட வரைவு யோசனை, இந்திய அரசிடமிருந்து நிதி உதவியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரிசபையும் தேசிய பெளதீகத் திட்டமிடல் திணைக்களமும் இணைந்து இந்த யோசனையைத் தயாரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் பணிகள் 2026ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வரைவு யோசனை தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பதில் பிரதி உயர்ஸ்தானிகரும் முதல் செயலாளருமான ரோஷினி தாம்சன் ஆகியோரின் தலைமையில் இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அநுராதபுர ஜய ஸ்ரீ மகா போதியைப் தரிசித்த போது, அநுராதபுர புனித நகரத்தின் அபிவிருத்திக்கு உதவி வழங்குவதாக வழங்கிய உறுாதிக்கமையவே இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைய, புனித நகர எல்லைக்குள் காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், ஏனைய அடிப்படை வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை கூட்டாக நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரிசபையும் தேசிய பெளதீகத் திட்டமிடல் திணைக்களமும் முன்மொழிந்துள்ளன.

அநுராதபுரத்தின் வரலாற்றுச் சிறப்பையும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் பாதுகாக்கும் அதேவேளையில், தற்போதைய உட்கட்டமைப்புக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதை மையமாகக் கொண்டே இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புனித நகரத்திற்குச் செல்லும் அணுகுசாலைகளைப் புனரமைத்தல், கழிவு அகற்றும் முறைமைகளைச் சீரமைத்தல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் சேதமடைந்துள்ள வரலாற்று மையங்களை மீளமைத்தல் ஆகிய முக்கிய பணிகள் இதில் உள்ளடங்குகின்றன.

இதேவேளை, குறித்த அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அண்மையில் மகா சங்கத்தினருடனும் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தியதுடன், இதன் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

மன்னார் மடு வீதியில் சிறுத்தை புலிகளின் நடமாட்டம்: எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு மக்களுக்கு கோரிக்கை

...

arvoshan.com

காங்கேசன்துறையில் 187 ஏக்கர் காணி விடுவிப்பு: மாவட்டச் செயலகத்திடம் ஆவணங்கள் ஒப்படைப்பு!

...

arvoshan.com

அபாயகரமான வேலைகளில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் ரூ. 100,000 அபராதம்: பிரதமர் அறிவிப்பு

...

arvoshan.com

அஹங்கல்லவில் லோக்கு பெட்டியின் தம்பி மீது துப்பாக்கிச்சூடு: படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

...

arvoshan.com

கற்பிட்டியில் அரிதான கடல் சங்குகளுடன் சந்தேகநபர் கைது

...

arvoshan.com

முக்கிய மதத்தலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: 21 வயது இளைஞர் விளக்கமறியலில்!

...

arvoshan.com

ரணில் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்: ஒளிப்பதிவாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

...

arvoshan.com

டீசல் லீட்டர் 528 ரூபா; விற்பனை 392 ரூபாவிற்கு: CPC தலைவர்

...

arvoshan.com

பலமான அரசியல் கட்சிகளை உருவாக்க கவிந்த ஜயவர்தன அழைப்பு

...

arvoshan.com

13 மாவட்டங்களுக்கு 'எச்சரிக்கை மட்ட' வெப்ப அலை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

...

arvoshan.com

அரிசி எனக் கூறி இரும்பு ஏற்றுமதி செய்ய முயற்சி: சுங்கப் பிரிவினரின் அதிரடி நடவடிக்கை

...

arvoshan.com

இந்தியாவில் $19 பில்லியன் மதிப்பிலான பசுமை ஆற்றல் திட்டத்திற்கு ஒப்புதல்

...

arvoshan.com

அதிக விலைக்கு குடிநீர் விற்பனை: பம்பலப்பிட்டி உணவகத்திற்கு 10 இலட்சம் அபராதம்

...

arvoshan.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கோட்டாபயவின் மனுவை நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

...

arvoshan.com

ரணிலின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்: தனியார் ஊடக ஒளிப்பதிவாளர் கைது!

...