முக்கிய மதத்தலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: 21 வயது இளைஞர் விளக்கமறியலில்!

arvloshan.com

இலங்கையின் முக்கிய மதத்தலங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்போவதாக வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில், இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரங்கிரி தம்புள்ளை குகை விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி தானிகம ஆனந்த தேரர், குற்றப்புலனாய்வுத் துறையினரிடம் (CID) அளித்த எழுத்துப்பூர்வ முறைப்பாட்டையடுத்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த முறைப்பாட்டின்படி, வாட்ஸ்அப் குழுவொன்றில் பகிரப்பட்ட செய்திகளில் புத்த பெருமானை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துக்களும், ஸ்ரீ தலதா மாளிகை , ஜய ஸ்ரீ மகா போதி , தூபாராமய மற்றும் தம்புள்ளை குகை விகாரை உள்ளிட்ட பல முக்கிய மதத்தலங்களை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவதற்கான அச்சுறுத்தல்களும் அடங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் மூலம், இந்த செய்திகளை அனுப்பியவர் இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் என்பது கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரின் கைபேசியை சோதனையிட்டபோது, புத்த பெருமானின் உருவத்தை விபரீதமாக சித்தரிக்கும் பல புகைப்படங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் போது, பொழுதுபோக்கிற்காகவே தான் இவற்றை வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, வரும் அக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

மன்னார் மடு வீதியில் சிறுத்தை புலிகளின் நடமாட்டம்: எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு மக்களுக்கு கோரிக்கை

...

arvoshan.com

காங்கேசன்துறையில் 187 ஏக்கர் காணி விடுவிப்பு: மாவட்டச் செயலகத்திடம் ஆவணங்கள் ஒப்படைப்பு!

...

arvoshan.com

அபாயகரமான வேலைகளில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் ரூ. 100,000 அபராதம்: பிரதமர் அறிவிப்பு

...

arvoshan.com

அஹங்கல்லவில் லோக்கு பெட்டியின் தம்பி மீது துப்பாக்கிச்சூடு: படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

...

arvoshan.com

கற்பிட்டியில் அரிதான கடல் சங்குகளுடன் சந்தேகநபர் கைது

...

arvoshan.com

ரணில் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்: ஒளிப்பதிவாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

...

arvoshan.com

டீசல் லீட்டர் 528 ரூபா; விற்பனை 392 ரூபாவிற்கு: CPC தலைவர்

...

arvoshan.com

பலமான அரசியல் கட்சிகளை உருவாக்க கவிந்த ஜயவர்தன அழைப்பு

...

arvoshan.com

13 மாவட்டங்களுக்கு 'எச்சரிக்கை மட்ட' வெப்ப அலை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

...

arvoshan.com

அநுராதபுர புனித நகர அபிவிருத்தி திட்டத்திற்கு 7.7 பில்லியன் ரூபா இந்திய நிதி உதவி

...

arvoshan.com

அரிசி எனக் கூறி இரும்பு ஏற்றுமதி செய்ய முயற்சி: சுங்கப் பிரிவினரின் அதிரடி நடவடிக்கை

...

arvoshan.com

இந்தியாவில் $19 பில்லியன் மதிப்பிலான பசுமை ஆற்றல் திட்டத்திற்கு ஒப்புதல்

...

arvoshan.com

அதிக விலைக்கு குடிநீர் விற்பனை: பம்பலப்பிட்டி உணவகத்திற்கு 10 இலட்சம் அபராதம்

...

arvoshan.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கோட்டாபயவின் மனுவை நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

...

arvoshan.com

ரணிலின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்: தனியார் ஊடக ஒளிப்பதிவாளர் கைது!

...