ஐரோப்பாவில் BYD நிறுவனத்தின் புதிய Ti7 SUV விற்பனைக்குத் தடை – லேண்ட் ரோவர் டிஃபென்டருடன் வடிவமைப்பு ஒற்றுமையே காரணம்!

arvloshan.com

சீனாவின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான BYD, தனது புதிய Fang Cheng Bao Ti7 SUV ரக வாகனத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் சொகுசு வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover – JLR) முன்வைத்த வடிவமைப்பு உரிமை மீறல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நெதர்லாந்து நீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நெதர்லாந்தின் ஹேக் மாவட்ட நீதிமன்றம் கடந்த நவம்பர் 20ஆம் திகதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

BYD நிறுவனத்தின் Ti7 SUV வாகனத்தின் ஒட்டுமொத்த வெளிப்புறத் தோற்றம், லேண்ட் ரோவர் டிஃபென்டர் (Land Rover Defender) வாகனத்துடன் ஒத்திருப்பதாகவும், இதன் மூலம் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வடிவமைப்பு உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக, இரு வாகனங்களின் ஒட்டுமொத்த வடிவமைப்பு விகிதங்கள், வட்டமான பக்கவாட்டு அமைப்பு, சக்கரங்களுக்கான வளைவுகள் மற்றும் ஜன்னல்களின் வடிவமைப்பு ஆகியவற்றில் ஒற்றுமைகள் காணப்படுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த இடைக்காலத் தடையுத்தரவின்படி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் Ti7 வாகனத்தை இறக்குமதி செய்வது, தயாரிப்பது, விற்பனைக்கு முன்வைப்பது, விற்பனை செய்வது, களஞ்சியப்படுத்துவது மற்றும் விநியோகிப்பது ஆகிய அனைத்துச் செயற்பாடுகளுக்கும் BYD நிறுவனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தத் தடையானது குறிப்பிட்ட Ti7 மொடலுக்கு மட்டுமே பொருந்தும் என்பதுடன், BYD நிறுவனத்தின் ஏனைய வாகனங்களின் விற்பனையைப் பாதிக்காது.

BYD நிறுவனத்தின் Fang Cheng Bao துணை வர்த்தகப் பெயரின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள Ti7, ஏழு பேர் பயணிக்கக்கூடிய Plug-in Hybrid SUV ரக வாகனமாகும்.

இந்நிலையில், Ti7 வாகனம் சுயாதீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் அறிவுசார் சொத்துரிமைகள் எதனையும் மீறவில்லை என்றும் BYD நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு லேண்ட் ரோவர் டிஃபென்டர் வாகனத்தின் தனித்துவமான வடிவமைப்பைப் பாதுகாக்கும் முயற்சியில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்துக்குக் கிடைத்த முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்தத் தீர்ப்பு முழுமையான விசாரணையின் பின்னர் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பல்ல. இது இடைக்காலத் தடையுத்தரவு மட்டுமே என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் BYD நிறுவனம் Ti7 வாகனத்தை ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கான உறுதியான திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சீன வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் சர்வதேச சந்தைகளில் தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வரும் நிலையில், பாரம்பரிய ஐரோப்பிய வாகன உற்பத்தியாளர்களுக்கும் சீன நிறுவனங்களுக்கும் இடையிலான போட்டி தீவிரமடைந்து வருவதை இந்த வழக்கு எடுத்துக்காட்டுகிறது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

வெளிநாடுகளில் AI தரவு மையங்களை அமைக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை

...

arvoshan.com

ஏர்பேக் வெடிக்கும் அபாயம்: அமெரிக்காவில் 3.14 இலட்சத்துக்கும் அதிகமான டொயோட்டா, லெக்ஸஸ் வாகனங்கள் மீளப்பெறப்படுகின்றன!

...

arvoshan.com

அமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையப் பாதுகாப்புத் தலைவர் மாற்றம்!

...

arvoshan.com

காசா பகுதியில் ஹமாஸ் சுரங்கத்தை அழிக்கும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை நிறைவு

...

arvoshan.com

ஐ.நா. சீர்திருத்தம், எரிபொருள் விநியோகம், அணுவாயுதக் கட்டுப்பாடு: ட்ரம்ப், ஸீ ஜின்பிங், புதின் பேச்சுவார்த்தை

...

arvoshan.com

ஹூதி ஏவுகணைத் தாக்குதல்: சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உயரமான கட்டடம் சேதம்

...

arvoshan.com

ஐ.நா. வாக்கெடுப்பில் அமெரிக்கா நடுநிலை; இலங்கை ஆதரவு

...

arvoshan.com

ட்ரம்ப்பை படுகொலை செய்யத் திட்டம் – பாகிஸ்தான் நபருக்கு அமெரிக்காவில் 27 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை!

...

arvoshan.com

பாதுகாப்பு அச்சுறுத்தல்: சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளை நவம்பர் 30 வரை இடைநிறுத்தியுள்ள முன்னணி விமான நிறுவனங்கள்

...

arvoshan.com

அயர்லாந்து விமான நிலையத்தில் 60 மில்லியன் டொலர் அமெரிக்க இராணுவ விமானத்தை சேதப்படுத்திய நபர்

...

arvoshan.com

அமெரிக்காவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான ஹோண்டா வாகனங்கள் தொடர்பில் விசாரணை!

...

arvoshan.com

ஜெப்ரி எப்ஸ்டீன் தற்கொலை செய்யவில்லை; கொலை செய்யப்பட்டிருக்கலாம் – தடயவியல் நிபுணர்கள் புதிய தகவல்

...

arvoshan.com

ஆசியப் பயணத்தை ஆரம்பித்தார் டொனால்ட் ட்ரம்ப் – பிலிப்பைன்ஸில் பொருளாதார ஒப்பந்தங்கள், நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை

...

arvoshan.com

அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் திடீர் சேவைத் தடை – ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிப்பு!

...

arvoshan.com

திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு முன்னுரிமை – கனடா அறிவிப்பு!

...