அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் திடீர் சேவைத் தடை – ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிப்பு!

arvloshan.com

அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான ஜே.பி. மோர்கன் சேஸின் (JPMorgan Chase) மென்பொருள் கோளாறு காரணமாக, திங்கட்கிழமை அந்நாட்டின் பல முன்னணி வங்கிகளின் சேவைகளில் பரவலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஜே.பி. மோர்கன் சேஸ், பேங்க் ஒஃப் அமெரிக்கா, வெல்ஸ் பார்கோ, யு.எஸ். வங்கி, கெப்பிட்டல் ஒன் உள்ளிட்ட பல வங்கிகளின் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, இணையவழி வங்கிச் சேவைகளை அணுகுதல், பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளுதல் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளை நிறைவு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் வாடிக்கையாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக சேவைத் தடைகளைக் கண்காணிக்கும் Downdetector இணையத்தளத்தில் பல வங்கிகளின் சேவைகள் தொடர்பாக முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. அத்துடன், பிரபலமான டிஜிட்டல் பணப் பரிமாற்றச் சேவையான Zelle ஊடாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளிலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறு தமது உள்கட்டமைப்பு வன்பொருள் அமைப்புகளைப் பாதித்த மென்பொருள் பிழையால் ஏற்பட்டதாக ஜே.பி. மோர்கன் சேஸ் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாகப் பணப் பரிவர்த்தனைகளைச் செயலாக்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், சேஸ் வங்கியுடன் இணைந்து பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் ஏனைய நிதி நிறுவனங்களும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் வங்கி தெரிவித்துள்ளது.

எனினும், இந்தச் சம்பவத்துக்குக் காரணம் சைபர் தாக்குதல் அல்ல எனத் தெளிவுபடுத்தியுள்ள வங்கி, இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த வங்கிக் கட்டமைப்பையும் பாதித்துள்ள நெருக்கடி அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.

மறுபுறம், தமது வங்கிக் கட்டமைப்புகள் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என யு.எஸ். வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், Zelle சேவையைப் பயன்படுத்தி ஏனைய நிதி நிறுவனங்களுக்கு அல்லது அங்கிருந்து பணம் அனுப்பிய வாடிக்கையாளர்கள் தாமதங்களைச் சந்தித்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

Zelle நிறுவனமும் தமது வலையமைப்பு வழமைபோன்று இயங்குவதாகத் தெரிவித்துள்ளதுடன், தனிப்பட்ட வங்கிகளில் ஏற்படும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாகப் பணப் பரிமாற்றங்களில் தாமதம் ஏற்படலாம் என விளக்கமளித்துள்ளது.

அண்மைக்காலமாக அமெரிக்காவில் மைக்ரோசொப்ட் சேவைகளில் ஏற்பட்ட தடைகள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புடன் தொடர்புடைய தொழில்நுட்பச் சிக்கல்கள் உள்ளிட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த வங்கிச் சேவைத் தடையும் வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், இந்தச் சம்பவங்களுக்கும் தற்போதைய வங்கிச் சேவைத் தடைக்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனிடையே, தொழில்நுட்பக் கோளாறைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, திங்கட்கிழமை மாலை முதல் பரிவர்த்தனைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக ஜே.பி. மோர்கன் சேஸ் வங்கி அறிவித்துள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

ஜெப்ரி எப்ஸ்டீன் தற்கொலை செய்யவில்லை; கொலை செய்யப்பட்டிருக்கலாம் – தடயவியல் நிபுணர்கள் புதிய தகவல்

...

arvoshan.com

ஆசியப் பயணத்தை ஆரம்பித்தார் டொனால்ட் ட்ரம்ப் – பிலிப்பைன்ஸில் பொருளாதார ஒப்பந்தங்கள், நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை

...

arvoshan.com

திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு முன்னுரிமை – கனடா அறிவிப்பு!

...

arvoshan.com

தென்னாப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 17 பேர் உயிரிழப்பு!

...

arvoshan.com

மத்திய கிழக்கிற்கு வந்தடைந்தது அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கிப் போர்க்கப்பல்

...

arvoshan.com

இரண்டு நாட்களில் 2,200க்கும் மேற்பட்ட குடியேறிகள் கேனரி தீவுகளை வந்தடைந்தனர்!

...

arvoshan.com

நைஜீரியாவில் 33.95 கிலோ கஞ்சாவுடன் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கைது!

...

arvoshan.com

சீனப் போட்டியால் நெருக்கடியில் ஜாகுவார்; 4,000 வேலைவாய்ப்புகள் குறைப்பு!

...

arvoshan.com

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி – விநியோகம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு!

...

arvoshan.com

டிக்டொக் காணொளி படப்பிடிப்பின்போது வனவிலங்கு தாக்கி 19 வயது இளைஞர் உயிரிழப்பு – பாகிஸ்தானில் இருவர் கைது

...

arvoshan.com

அமெரிக்காவில் ஆற்றில் கவிழ்ந்த பயணிகள் படகு – 30க்கும் மேற்பட்டோர் காயம்!

...

arvoshan.com

அமெரிக்க வான்பரப்பில் நான்கு மணி நேரப் பெரும் குழப்பம் – என்ன நடந்தது?

...

arvoshan.com

ரஷ்யாவில் தொடர் குண்டுவெடிப்புகள்: இராணுவ அதிகாரி பலி; உக்ரைன் முன்னாள் பிரதமரின் ஆலோசகர் படுகாயம்

...

arvoshan.com

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி வெவ்வேறு விலைகளை நிர்ணயிக்கும் நடைமுறைக்குத் தடை – நியூயோர்க்

...

arvoshan.com

டைட்டானிக்கை விட நீளமான கப்பல் கடலில் மூழ்கடிப்பு! உலகின் மிகப்பெரிய செயற்கைப் பவளப்பாறையாக மாற்றம்

...