இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இலங்கைப் பிரதேசத்தை ஒருபோதும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் – உயர்ஸ்தானிகர்

arvloshan.com

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் நிலப்பரப்பை எவ்விதத்திலும் பயன்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலன்னே மீண்டும் உறுதியளித்துள்ளார்.

பிராந்திய கடல் ஒத்துழைப்பு தொடர்பான நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்கனவே இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாகவும், அதனைப் பல சந்தர்ப்பங்களில் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையும் இந்தியாவும் கடலை மட்டுமன்றி பாதுகாப்பையும் பகிர்ந்துகொள்கின்றன எனக் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர், இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கை தனது பிரதேசத்தைப் பயன்படுத்த அனுமதிக்காது எனத் தெரிவித்தார்.

இந்த உறுதிப்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான விஞ்ஞான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வலுவான அடித்தளமாக அமைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, கடல் ஆராய்ச்சி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் அனர்த்தங்களுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இலங்கையின் பொருளாதார மற்றும் எதிர்கால வளர்ச்சியில் கடல் வளங்கள், மீன்பிடித்துறை, துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பாதுகாப்பு ஆகியவை முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் பிரத்தியேக பொருளாதார வலயம் (EEZ), அதன் நிலப்பரப்பை விட சுமார் எட்டு மடங்கு பெரியது என்றும் தெரிவித்தார்.

கடல் வளங்களைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கும் எந்தவொரு நாடும் தனித்து செயற்பட முடியாது எனக் குறிப்பிட்ட அவர், கடல் விஞ்ஞான ஆய்வுகளில் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அனர்த்தங்களுக்கான முன்னாயத்தம் மற்றும் அவசரகால நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இந்தியா இலங்கைக்கு வழங்கிவரும் ஆதரவையும் அவர் பாராட்டினார். குறிப்பாக, கடல் வானிலை முன்னறிவிப்பு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்புகள் மூலம் இந்தியா வழங்கிவரும் பங்களிப்பை அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட 'டித்வா' (Ditwah) சூறாவளியின் போது, கொழும்பில் ஏற்கனவே தரித்திருந்த இந்தியக் கடற்படைக் கப்பல்கள் சில மணிநேரங்களுக்குள் நிவாரணப் பொருட்களை இறக்கத் தொடங்கியதாகவும், அனர்த்த நிலைமையின் போது இலங்கைக்கு முதன்மையானதும் மிகப்பெரியதுமான உதவியை இந்தியா வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடல்சார் தரவுகள், ஆராய்ச்சி நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப வளங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் இந்திய மற்றும் இலங்கை விஞ்ஞானிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

பிராந்தியத்தின் நீலப் பொருளாதாரம் மற்றும் கடல்சார் நிர்வாகத்தை வலுப்படுத்த இளம் விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் சட்டத்துறை நிபுணர்களை உருவாக்குவதில் முதலீடு செய்வதும் அவசியம் என அவர் தெரிவித்தார்.

பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை செயலகத்தை நடத்தவுள்ள கொழும்பு பாதுகாப்பு மாநாடு (Colombo Security Conclave) மற்றும் தலைமைத்துவம் இலங்கையிடமிருந்து இந்தியாவுக்கு மாறியுள்ள இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் சங்கம் (IORA) ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

அத்துடன், இந்தோ-பசுபிக் பெருங்கடல் முன்முயற்சி (IPOI) போன்ற திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையிலுள்ள பிராந்திய அமைப்புகளுக்கு வலுச்சேர்ப்பதுடன், பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் நீண்டகால ஒத்துழைப்புகளாக வளர்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாகவும் உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலன்னே தெரிவித்தார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

நவம்பர் மாத எரிபொருள் விலைத் திருத்தம்: டீசல் விலை இடைவெளி குறைவு; பெட்ரோல் விலை இடைவெளி அதிகரிப்பு

...

arvoshan.com

ஞானசார தேரர் விடுதலை கோரி நடத்தப்பட்ட போராட்டம்: விதிமீறல்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

...

arvoshan.com

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்கவுக்கு ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் அஞ்சலி

...

arvoshan.com

இலங்கையின் புதிய குற்றத் தடுப்புச் சட்டமூலத்திற்கு ஐ.நா. கடும் எதிர்ப்பு!

...

arvoshan.com

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றும் ஜனநாயகக் கட்சி – ட்ரம்புக்கு பெரும் அரசியல் பின்னடைவு!

...

arvoshan.com

இலங்கையின் மிக வயதான ஆண் 111ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்; 92 பேரக்குழந்தைகள்!

...

arvoshan.com

ஆற்றில் மூழ்கிய பெண்ணைத் துணிச்சலுடன் காப்பாற்றிய நபர்!

...

arvoshan.com

நீர்கொழும்பில் பிரமிட் நிதி மோசடி தொடர்பில் இருவர் கைது!

...

arvoshan.com

வங்கியின் அதிகாரி எனக் கூறி தொலைபேசி அழைப்பு – 70 வயது முதியவரிடம் ரூ. 46 இலட்சம் மோசடி!

...

arvoshan.com

மஹியங்கனையில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்கள் பெருமளவில் மீட்பு – சந்தேகநபர் கைது!

...

arvoshan.com

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகள் – 4 பாதசாரிகள் உயிரிழப்பு!

...

arvoshan.com

மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா? 4ஆம் காலாண்டுக்கான புதிய திருத்தப்பட்ட விபரங்களை வெளியிட்டது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

...

arvoshan.com

டிஜிட்டல் நிதிச் சேவைகளில் சைபர் தாக்குதல், மோசடி மற்றும் தரவுக் கசிவு அபாயம் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

...

arvoshan.com

சொத்துக் குவிப்பு விசாரணை: மூத்த பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில் வைப்பு!

...

arvoshan.com

நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு மூன்று கப்பல்களில் எரிவாயுவை இறக்குமதி செய்ய LAUGFS Gas நடவடிக்கை

...