வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய வகையில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி இன்று (04) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.