ரிதி விகாரை அபிவிருத்தித் திட்டம்: மாதாந்தம் 5,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலக்கு

arvloshan.com

குருநாகலில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரிதி விகாரையை சர்வதேச பௌத்த மற்றும் ஆன்மீக நலன்புரிச் சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்து, மாதாந்தம் சுமார் 5,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதுடன், ரிதி விகாரையின் வரலாற்று மற்றும் கலாசாரப் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல், நேற்று (03) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றதுடன், மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் யோகா, தியானம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதன் மூலம் ரிதி விகாரையை சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆன்மீகச் சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், விகாரை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை கார்பன் வெளியேற்றமற்ற வலயமாகப் பேணுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத போக்குவரத்து சேவைகள், உணவகங்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை முன்னெடுப்பதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

ரிதி விகாரையையும் அதனை அண்மித்துள்ள சுற்றுலாத் தலங்களையும் இணைக்கும் வீதிக் கட்டமைப்பை மேம்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டன.

அத்துடன், இந்தத் திட்டத்தில் உள்ளூர் இளைஞர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பயிற்சி வாய்ப்புகளையும் வழங்குவதன் முக்கியத்துவமும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த அபிவிருத்திப் பணிகள் சுற்றுலா அமைச்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, வடமேல் மாகாண சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் ரிதி விகாரையின் பிரதமகுரு வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே புத்தரக்கித்த தேரர், வணக்கத்திற்குரிய ரிதிகம வனரதன தேரர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.எம். அஸ்லம், அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறை பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

இலங்கையின் புதிய குற்றச்செயல் தடுப்புச் சட்டமூலம்: 11 முக்கிய விடயங்கள் குறித்து ஐ.நா கவலை

...

arvoshan.com

2025 ஒக்டோபர் முதல் இதுவரை 11,131 சிறுவர்கள் கைது – பொலிஸ் பேச்சாளர்

...

arvoshan.com

ஜனாதிபதியின் மூன்றாவது வரவு – செலவுத் திட்டத்திற்கு முன்னதாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நாமல் ராஜபக்ஷ கேள்வி

...

arvoshan.com

பல்வேறு குற்றச்சாட்டுகளில் 208 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது; 1,500 பேர் பணி இடைநீக்கம்

...

arvoshan.com

நீரிழிவு நோயை முன்கூட்டியே கண்டறிவது அவசியம்: இரத்தப் பரிசோதனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுகாதார நிபுணர்கள்

...

arvoshan.com

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டங்களுக்கு எதிராக பொல்துவ சந்தியில் போராட்டம்

...

arvoshan.com

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ஷ

...

arvoshan.com

நவம்பர் மாத எரிபொருள் விலைத் திருத்தம்: டீசல் விலை இடைவெளி குறைவு; பெட்ரோல் விலை இடைவெளி அதிகரிப்பு

...

arvoshan.com

ஞானசார தேரர் விடுதலை கோரி நடத்தப்பட்ட போராட்டம்: விதிமீறல்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

...

arvoshan.com

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்கவுக்கு ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் அஞ்சலி

...

arvoshan.com

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இலங்கைப் பிரதேசத்தை ஒருபோதும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் – உயர்ஸ்தானிகர்

...

arvoshan.com

இலங்கையின் புதிய குற்றத் தடுப்புச் சட்டமூலத்திற்கு ஐ.நா. கடும் எதிர்ப்பு!

...

arvoshan.com

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றும் ஜனநாயகக் கட்சி – ட்ரம்புக்கு பெரும் அரசியல் பின்னடைவு!

...

arvoshan.com

இலங்கையின் மிக வயதான ஆண் 111ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்; 92 பேரக்குழந்தைகள்!

...

arvoshan.com

ஆற்றில் மூழ்கிய பெண்ணைத் துணிச்சலுடன் காப்பாற்றிய நபர்!

...