பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் ‘மூன் வாக்’ டிசம்பர் 24ஆம் திகதி வெளியீடு

arvloshan.com

நடிகர் பிரபுதேவா மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மூன் வாக்’ திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 24ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை நடிகர் பிரபுதேவா தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குடும்பத்துடன் இணைந்து பார்த்து ரசிக்கக்கூடிய நகைச்சுவை பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘மூன் வாக்’ உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இந்த விடுமுறைக் காலத்தில் ரசிகர்களை சிரிப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும் திரையரங்கக் கொண்டாட்டமாக இப்படம் அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இத்திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ளதுடன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் மற்றும் மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளதுடன், அனைத்துப் பாடல்களையும் அவரே பாடியுள்ளார். மேலும், இத்திரைப்படத்தில் ஒரு காட்சியிலும் அவர் நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990களில் பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான ‘காதலன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களும் அவற்றின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

இந்தக் கூட்டணி கடைசியாக 1997ஆம் ஆண்டு வெளியான ‘மின்சார கனவு’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ‘மூன் வாக்’ திரைப்படத்தின் மூலம் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். அனுப் வி. ஷைலஜா ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

நீண்டகாலமாகத் தயாரிப்பில் இருந்த இத்திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது அதன் வெளியீட்டுத் திகதி டிசம்பர் 24ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

குடும்பத்துடன் கிரீஸில் வலம் வந்த ரஜினிகாந்த் – புகைப்படங்களைப் பகிர்ந்த சவுந்தர்யா

...

arvoshan.com

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் வில்லனாக இணையும் சிவராஜ்குமார்!

...

arvoshan.com

15 ஆண்டுகால இசைப் பயணம்... நெகிழ்ச்சியுடன் நினைவுகளைப் பகிர்ந்த அனிருத்!

...

arvoshan.com

கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படம் ‘செங்குலம்’ – தலைப்பு போஸ்டர் வெளியீடு

...

arvoshan.com

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலின் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

...

arvoshan.com

GTA 6: முதல் வாரத்திலேயே ரூ.1.73 இலட்சம் கோடி வருவாய் ஈட்டும் எனக் கணிப்பு!

...

arvoshan.com

புத்தாண்டு தினத்தில் மீண்டும் திரைக்கு வரும் விஜய்யின் ‘பைரவா’!

...

arvoshan.com

மணிரத்னம் இயக்கத்தில் ‘இஞ்சி வெல்லம்’ – ஜனவரி 29ஆம் திகதி உலகளாவிய ரிலீஸ்!

...

arvoshan.com

குர்ஆன் வசனம் பொறிக்கப்பட்ட ஆபரணம் சர்ச்சை: கரீனா கபூருக்கு சட்ட அறிவிப்பு!

...

arvoshan.com

கிரீஸில் கோலாகலமாக நடைபெற்ற அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; வெளியான திருமணப் புகைப்படங்கள்

...

arvoshan.com

‘சீன்’ படத்தின் வெற்றி: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சூர்யா – ஜோதிகா நெகிழ்ச்சிப் பதிவு

...

arvoshan.com

காதலர் ராஜவேல் ராஜை மணந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்!

...

arvoshan.com

‘டேர் டெவில்’ படப்பிடிப்பில் நவம்பர் 12ஆம் தேதி பங்கேற்கும் அஜித்

...

arvoshan.com

‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு ஆரம்பம் – முதல் தோற்றம் வெளியீடு!

...

arvoshan.com

சாதனை படைத்த ‘ஜெயிலர் 2’ திரைப்படம் – நவம்பர் 12 முதல் அமேசான் பிரைம் வீடியோவில்!

...