GTA 6: முதல் வாரத்திலேயே ரூ.1.73 இலட்சம் கோடி வருவாய் ஈட்டும் எனக் கணிப்பு!
உலகளாவிய ரீதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள GTA 6 காணொளி விளையாட்டு, வெளியான முதல் வாரத்திலேயே 5.2 பில்லியன் அமெரிக்க டொலர் வரை வருவாய் ஈட்டக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாணய மதிப்பின்படி, இது சுமார் ரூ.1.73 இலட்சம் கோடியாகும். அதேவேளை, முதல் வார வருவாய் 3.25 பில்லியன் முதல் 5.2 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அமையக்கூடும் என ஆய்வு நிறுவனம் ஒன்று மதிப்பிட்டுள்ளது.
உலகின் மிகவும் பிரபலமான காணொளி விளையாட்டுத் தொடர்களில் ஒன்றான Grand Theft Auto (GTA) தொடரின் புதிய பாகமான GTA 6, எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில், இந்த விளையாட்டின் வெளியீடு உலகளாவிய கேமிங் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெறும் என்றும், அதன் காரணமாக முதல் வாரத்திலேயே சாதனை அளவிலான வருவாயை ஈட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், வெளியிடப்பட்டுள்ள வருவாய் மதிப்பீடுகள் ஆய்வு நிறுவனத்தின் கணிப்புகள் மட்டுமே என்பதுடன், அவை இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட விற்பனை வருவாய் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.