காதலர் ராஜவேல் ராஜை மணந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்!

arvloshan.com

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர், தனது நீண்டகால காதலரான ராஜவேல் ராஜைத் திருமணம் செய்துகொண்டார்.

கல்லூரிப் பருவத்தில் இருந்து ராஜவேல் ராஜை காதலித்து வந்த பிரியா பவானி சங்கர், தற்போது அவரைத் திருமணம் செய்துள்ளார். உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. இத்திருமண நிகழ்வின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது ஊடகப் பயணத்தைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர், பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்ற இவர், தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘பத்து தல’, ‘டிமாண்டி காலனி 2’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து இவர் நடித்திருந்த ‘இருமுடிகட்டு’ திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்திருந்தது.

தமிழில் கடைசியாக ‘ஹாட்ஸ்பாட் 2 மச்’ திரைப்படத்தில் நடித்திருந்த பிரியா பவானி சங்கர், அடுத்ததாக நடித்துள்ள ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இதற்கிடையில், இவர் நடித்துள்ள ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் அண்மையில் நிறைவடைந்துள்ளது. மேலும், ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகவுள்ள ‘இந்தியன் 3’ திரைப்படத்திலும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

இந்நிலையில், நீண்டகால காதலரைத் திருமணம் செய்துகொண்ட நடிகை பிரியா பவானி சங்கருக்கு திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

குர்ஆன் வசனம் பொறிக்கப்பட்ட ஆபரணம் சர்ச்சை: கரீனா கபூருக்கு சட்ட அறிவிப்பு!

...

arvoshan.com

கிரீஸில் கோலாகலமாக நடைபெற்ற அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; வெளியான திருமணப் புகைப்படங்கள்

...

arvoshan.com

‘சீன்’ படத்தின் வெற்றி: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சூர்யா – ஜோதிகா நெகிழ்ச்சிப் பதிவு

...

arvoshan.com

‘டேர் டெவில்’ படப்பிடிப்பில் நவம்பர் 12ஆம் தேதி பங்கேற்கும் அஜித்

...

arvoshan.com

‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு ஆரம்பம் – முதல் தோற்றம் வெளியீடு!

...

arvoshan.com

சாதனை படைத்த ‘ஜெயிலர் 2’ திரைப்படம் – நவம்பர் 12 முதல் அமேசான் பிரைம் வீடியோவில்!

...

arvoshan.com

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணையும் ஸ்ரீலீலா – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

...

arvoshan.com

இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் முதல் 5 யூடியூபர்கள் யார்? மாத வருமானம் பல கோடிகளாம்!

...

arvoshan.com

புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒரு வாரம் தினமும் 6 காட்சிகள் – முதல்வர் விஜய் உத்தரவு!

...

arvoshan.com

தமிழ் சினிமாவில் புதிய வரலாறு படைத்த ‘ஜெயிலர் 2’: ரூ.800 கோடியைக் கடந்த வசூல்!

...

arvoshan.com

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் இணையும் நடிகர் பார்த்திபன்!

...

arvoshan.com

‘ஓம்’ படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்த தனுஷுக்கு சூர்யா நன்றி!

...

arvoshan.com

குற்றப் பின்னணியில் உருவாகும் த்ரில்லர் படத்தில் பிரேம்ஜி அமரன்!

...

arvoshan.com

ஷாருக்கானின் ‘King’ திரைப்படம் – வெளிநாட்டு விநியோக உரிமை ரூ.175 கோடிக்கு விற்பனை!

...

arvoshan.com

பழங்குடி மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகும் ‘அரிகொம்பன்’ திரைப்படம்

...