புத்தாண்டு தினத்தில் மீண்டும் திரைக்கு வரும் விஜய்யின் ‘பைரவா’!
நடிகரும் தமிழக முதல்வருமான விஜய் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படம், 2027ஆம் ஆண்டு புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி ஆகியோர் தயாரித்த இத்திரைப்படத்தை பரதன் இயக்கியிருந்தார். ‘அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்துக்குப் பிறகு விஜய் - பரதன் கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா, மைம் கோபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
2017ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
இந்நிலையில், 2027ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ‘பைரவா’ திரைப்படத்தை சிம் சினி இன்டர்நேஷனல் நிறுவனம் மறுவெளியீடு செய்யவுள்ளது.
திரைப்படம் வெளியாகி சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.