சாதனை படைத்த ‘ஜெயிலர் 2’ திரைப்படம் – நவம்பர் 12 முதல் அமேசான் பிரைம் வீடியோவில்!

arvloshan.com

இந்தியத் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழில் உருவான இந்த அதிரடித் திரைப்படம் உலகளாவிய ரீதியில் 820 கோடி இந்திய ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் இதுவரை வெளியான தமிழ்த் திரைப்படங்களில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படமாக ‘ஜெயிலர் 2’ சாதனை படைத்துள்ளதாகப் பாக்ஸ் ஆபிஸ் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

திரையரங்குகளில் திரைப்படம் தொடர்ந்து திரையிடப்பட்டு வரும் நிலையில், அதன் டிஜிட்டல் ஒளிபரப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில், ஓய்வுபெற்ற சிறை அதிகாரியான முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடித்துள்ளார். சக்திவாய்ந்த குற்றக் கும்பல் ஒன்று அவரது குடும்பத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதையடுத்து, அவர் மீண்டும் ஆபத்தான சூழலுக்குள் இழுக்கப்படுவதே திரைப்படத்தின் முக்கியக் கதைக்களமாக அமைந்துள்ளது.

இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் மோகன்லால், ஹிருத்திக் ரோஷன் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இத்திரைப்படத்தைப் பார்வையிட முடியும் என அமேசான் பிரைம் வீடியோ அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் இந்தத் திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.

இதன் மூலம் ‘ஜெயிலர்’ முதல் பாகத்தையும் அதன் இரண்டாம் பாகத்தையும் ஒரே தளத்தில் ரசிகர்கள் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணையும் ஸ்ரீலீலா – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

...

arvoshan.com

இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் முதல் 5 யூடியூபர்கள் யார்? மாத வருமானம் பல கோடிகளாம்!

...

arvoshan.com

புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒரு வாரம் தினமும் 6 காட்சிகள் – முதல்வர் விஜய் உத்தரவு!

...

arvoshan.com

தமிழ் சினிமாவில் புதிய வரலாறு படைத்த ‘ஜெயிலர் 2’: ரூ.800 கோடியைக் கடந்த வசூல்!

...

arvoshan.com

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் இணையும் நடிகர் பார்த்திபன்!

...

arvoshan.com

‘ஓம்’ படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்த தனுஷுக்கு சூர்யா நன்றி!

...

arvoshan.com

குற்றப் பின்னணியில் உருவாகும் த்ரில்லர் படத்தில் பிரேம்ஜி அமரன்!

...

arvoshan.com

ஷாருக்கானின் ‘King’ திரைப்படம் – வெளிநாட்டு விநியோக உரிமை ரூ.175 கோடிக்கு விற்பனை!

...

arvoshan.com

பழங்குடி மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகும் ‘அரிகொம்பன்’ திரைப்படம்

...

arvoshan.com

15 நாட்களில் ரூ.765 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ புதிய சாதனை!!

...

arvoshan.com

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராகக் களமிறங்கும் மித்துன் மாணிக்கம் – ‘ஃபேமிலி பாய்’ டிசம்பர் 11இல் வெளியீடு

...

arvoshan.com

உண்மை தெரியாமல் விமர்சிப்பது வருத்தமளிக்கிறது! – சுந்தர்.சி

...

arvoshan.com

‘ஸ்டார் ட்ரெக்’ புகழ் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்!

...

arvoshan.com

ஏ.ஐ. மூலம் போலி வீடியோ: நடிகை சுனைனா கடும் கண்டனம்

...

arvoshan.com

‘தத் த்வம் அஸி’ படத்தின் தலைப்பு ‘மணிகண்டா’ என மாற்றம்!

...