TIN சான்றிதழ் பெறுவதில் தொடரும் நெரிசல் – நாடளாவிய ரீதியில் வருமான வரித் திணைக்கள அலுவலகங்களில் மக்கள் அவதி

arvloshan.com

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களில் இன்று (03) வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான (TIN) சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.

குறிப்பாக, களுத்துறை பிராந்திய உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் அதிகளவான மக்கள் திரண்டிருந்ததுடன், TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்வதில் தாமதங்களும் பல்வேறு சிரமங்களும் நிலவுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிலர் இன்று காலை முதல் வரிசையில் காத்திருப்பதாகவும், மேலும் சிலர் கடந்த பல நாட்களாகத் தொடர்ச்சியாக அலுவலகத்துக்குச் சென்றும் தங்களால் விண்ணப்பச் செயல்முறையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் பல மணிநேரம் காத்திருந்த போதிலும், கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அத்துடன், அலுவலகத்துக்குச் செல்வதற்காகத் தொழில் செய்யும் இடங்களில் விடுமுறை பெற்றுச் சென்ற போதிலும், மேலதிக ஆவணங்களைக் கொண்டுவருமாறும் அல்லது மற்றொரு நாளில் வருமாறும் அதிகாரிகள் அறிவுறுத்துவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மழையுடனான காலநிலையிலும் நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த மக்கள், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட வாகனம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள் தற்போது நிர்வாகத் தாமதங்களால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்த ஒருவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக இவ்வாறான அசௌகரியங்கள் ஏற்படுத்தப்படுவது அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை அதிகரிக்கக்கூடும் எனவும் சிலர் எச்சரித்துள்ளனர்.

இலங்கையின் வரி விதிமுறைகளின்படி, 2023 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் 18 வயதைப் பூர்த்தி செய்த அனைத்து வதிவிடப் பிரஜைகளும், 2024 ஜனவரி முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னர் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2026 நவம்பர் முதலாம் திகதி முதல் நிதி, வர்த்தகம் மற்றும் நிர்வாகம் சார்ந்த எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு TIN சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதையடுத்து, அதனைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு மூன்று கப்பல்களில் எரிவாயுவை இறக்குமதி செய்ய LAUGFS Gas நடவடிக்கை

...

arvoshan.com

இலங்கையில் டிஜிட்டல் சொத்துக்களைப் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்த முடியாது – மத்திய வங்கி ஆளுநர்

...

arvoshan.com

சம்பளம் வழங்கப்படாமைக்கு எதிராக ‘மவ்பிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ ஊடகவியலாளர்கள் போராட்டம்

...

arvoshan.com

TIN இலக்கம் இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்தல், வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தலில் தற்காலிக சலுகை!

...

arvoshan.com

ரத்கம பகுதியில் வெள்ளப் பாதிப்பைக் கட்டுப்படுத்த ரூ.3.38 பில்லியன் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

ABU பொதுக்கூட்டத்துக்கு 10.4 கோடி ரூபாய் அரச நிதி: அமைச்சர் நளிந்த விளக்கம்

...

arvoshan.com

மருத்துவர்களின் கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் போராட்டம் – முக்கிய வைத்தியசாலைகளில் ஆர்ப்பாட்டம் நடத்த GMOA தீர்மானம்!

...

arvoshan.com

சம்பூர் – கப்பல்துறை மின்சார பரிமாற்றத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

...

arvoshan.com

சிறுநீரக நோயாளிகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய்களுக்கான மருந்துகள் கொள்வனவு – அமைச்சரவை அங்கீகாரம்

...

arvoshan.com

டித்வா புயலால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க ரூ. 3.3 பில்லியன் ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி!

...

arvoshan.com

இலங்கையின் நிலையான வர்த்தகத்தை மேம்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் 10 மில்லியன் யூரோ நிதியுதவி – அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

நீதித்துறையின் சுதந்திரத்திற்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து குரல் கொடுத்தவர் லால் விஜேநாயக்க – சஜித் புகழாரம்

...

arvoshan.com

வவுனியா ஏ9 வீதியின் புனரமைப்புக்கு 1.3 பில்லியன் ரூபா ஒப்பந்தம்

...

arvoshan.com

கிரிஷ் ஒப்பந்த மோசடி வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை – எனினும் தொடர்ந்து விளக்கமறியலில்

...

arvoshan.com

புதிய TIN நடைமுறை: இனி வருமான வரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை!

...