2026ஆம் ஆண்டில் ஓகஸ்ட் 30ஆம் திகதி வரை இலங்கையின் கறுவாத் தொழில்துறை மூலம் 185 மில்லியன் டொலர் வருமானம்

arvloshan.com

இலங்கையின் கறுவாத் தொழில்துறை மூலம் 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் 30ஆம் திகதி வரை 185 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 60 பில்லியன் ரூபாய்) வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டு இறுதிக்குள் கறுவாத் தொழில்துறை மூலம் 100 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டுவதற்கு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்காக விவசாய அமைச்சின் ஊடாக கறுவா அபிவிருத்தித் திணைக்களத்திற்கு 365 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியின் மூலம், பாரம்பரியமாக கறுவா பயிரிடப்படாத பகுதிகளில் புதிதாக 2,500 ஏக்கர் நிலப்பரப்பில் கறுவா பயிர்ச்செய்கையை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், பெறுமதி சேர்க்கப்பட்ட கறுவா உற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கும் கைத்தொழில்களை ஊக்குவித்தல், கறுவாத் தொழில்துறைக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற தரச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் இத்துறையில் தொழில்முனைவோரை உருவாக்குதல் ஆகிய நடவடிக்கைகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இலங்கையின் கறுவாத் தொழில்துறையை மேலும் மேம்படுத்தி, சர்வதேச சந்தையில் அதன் போட்டித்தன்மையை அதிகரிப்பதுடன், 2026ஆம் ஆண்டுக்கான வருமான இலக்கை அடைவதே இந்தத் திட்டங்களின் பிரதான நோக்கம் என அமைச்சு தெரிவித்துள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

கேப்பாபிலவு நிலமீட்புப் போராட்டக் கொட்டகைக்கு தீ வைப்பு – மர்ம நபர்கள் குறித்து விசாரணை கோரிக்கை

...

arvoshan.com

ABU மாநாட்டை நடத்துவதன் மூலம் ரூ.250 மில்லியன் பெறுமதியான விளம்பர வாய்ப்பு – இலங்கை சுற்றுலாத்துறை

...

arvoshan.com

மகா பருவத்துக்குத் தேவையான உரம் போதியளவில் கையிருப்பில் – தேசிய உரச் செயலகம் அறிவிப்பு

...

arvoshan.com

PickMe Food, Uber Eats சேவைகளை நம்பி அனைவராலும் வாழ முடியாது – எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கத்திடம் ஹர்ஷா கேள்வி

...

arvoshan.com

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களுக்கு எதிராக பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

...

arvoshan.com

33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு – நிதி அமைச்சு அறிவிப்பு

...

arvoshan.com

TIN சான்றிதழுக்காக வருமான வரி அலுவலகங்களுக்கு தேவையின்றி வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

...

arvoshan.com

ஓய்வுபெறும் முப்படையினருக்கு புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த திட்டம்

...

arvoshan.com

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு: அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்டோருக்கு புதிய நீதிமன்றத் திகதி அறிவிப்பு

...

arvoshan.com

சபரகமுவ மாகாணத்தில் உயர்தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய 40 மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி!

...

arvoshan.com

தும்பர சிறைச்சாலையில் கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: புதிய தகவல்கள் வெளியாகின – உறவினர்கள் நீதிகோரி கோரிக்கை

...

arvoshan.com

கெக்கிராவையில் சட்டவிரோத துப்பாக்கிகள், வனவிலங்கு பொருட்களுடன் மூவர் கைது!

...

arvoshan.com

சவூதியில் இலங்கைப் பிரஜைக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்தானமை: ஜனாதிபதி அநுரவுக்கு மியன்மார் அமைப்பு பாராட்டு

...

arvoshan.com

யானைகளைப் பாதுகாக்கவும் – மனித - யானை மோதல்களைக் குறைக்கவும் நாடளாவிய நடவடிக்கை ஆரம்பம்!

...

arvoshan.com

மெல்பேர்ன் – கொழும்பு விமானத்தில் அவசரநிலை அறிவிப்பு: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விளக்கம்

...