கெக்கிராவையில் சட்டவிரோத துப்பாக்கிகள், வனவிலங்கு பொருட்களுடன் மூவர் கைது!

arvloshan.com

கெக்கிராவை பகுதியில் வனவிலங்கு அதிகாரிகளும் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்புகளின்போது பெண் ஒருவரும் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனவிலங்குகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் பொறிகளை ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, கெக்கிராவை பிரதேச செயலகப் பிரிவின் மீகிரியாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு சுற்றிவளைப்பில், சட்டவிரோத துப்பாக்கி ஒன்று, பொறித் துப்பாக்கி ஒன்று, ஈயத் தோட்டாக்கள், மான்களின் கொம்புகளால் செய்யப்பட்ட ஐந்து பொருட்கள், மான்கொம்புகளால் தயாரிக்கப்பட்ட கத்திகள் மற்றும் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தப் பொருட்களுடன் தொடர்புடைய ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கஹல்ல-பல்லேகல சரணாலயத்திற்கு உட்பட்ட நீகினியாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சுற்றிவளைப்பில், துப்பாக்கியைப் பயன்படுத்தி முயல் ஒன்றைக் கொன்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து பொறித் துப்பாக்கி ஒன்றும் ஏழு தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், சந்தேகநபரிடம் அனுமதிப்பத்திரத்துடன் கூடிய துப்பாக்கி ஒன்றும் காணப்பட்டுள்ளதுடன், அதன் குழாயின் நீளம் உள்ளிட்ட பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் கெக்கிராவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கல்கமுவ பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தேசிய நடவடிக்கை, வனவிலங்குகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் பொறிகளைக் கைப்பற்றும் நோக்கில் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

கேப்பாபிலவு நிலமீட்புப் போராட்டக் கொட்டகைக்கு தீ வைப்பு – மர்ம நபர்கள் குறித்து விசாரணை கோரிக்கை

...

arvoshan.com

ABU மாநாட்டை நடத்துவதன் மூலம் ரூ.250 மில்லியன் பெறுமதியான விளம்பர வாய்ப்பு – இலங்கை சுற்றுலாத்துறை

...

arvoshan.com

மகா பருவத்துக்குத் தேவையான உரம் போதியளவில் கையிருப்பில் – தேசிய உரச் செயலகம் அறிவிப்பு

...

arvoshan.com

PickMe Food, Uber Eats சேவைகளை நம்பி அனைவராலும் வாழ முடியாது – எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கத்திடம் ஹர்ஷா கேள்வி

...

arvoshan.com

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களுக்கு எதிராக பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

...

arvoshan.com

33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு – நிதி அமைச்சு அறிவிப்பு

...

arvoshan.com

TIN சான்றிதழுக்காக வருமான வரி அலுவலகங்களுக்கு தேவையின்றி வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

...

arvoshan.com

ஓய்வுபெறும் முப்படையினருக்கு புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த திட்டம்

...

arvoshan.com

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு: அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்டோருக்கு புதிய நீதிமன்றத் திகதி அறிவிப்பு

...

arvoshan.com

சபரகமுவ மாகாணத்தில் உயர்தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய 40 மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி!

...

arvoshan.com

தும்பர சிறைச்சாலையில் கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: புதிய தகவல்கள் வெளியாகின – உறவினர்கள் நீதிகோரி கோரிக்கை

...

arvoshan.com

சவூதியில் இலங்கைப் பிரஜைக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்தானமை: ஜனாதிபதி அநுரவுக்கு மியன்மார் அமைப்பு பாராட்டு

...

arvoshan.com

யானைகளைப் பாதுகாக்கவும் – மனித - யானை மோதல்களைக் குறைக்கவும் நாடளாவிய நடவடிக்கை ஆரம்பம்!

...

arvoshan.com

மெல்பேர்ன் – கொழும்பு விமானத்தில் அவசரநிலை அறிவிப்பு: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விளக்கம்

...

arvoshan.com

ரூ. 79 இலட்சம் ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சின் செயலாளர் கைது!

...