மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு: அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்டோருக்கு புதிய நீதிமன்றத் திகதி அறிவிப்பு

arvloshan.com

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி (Bond) பரிவர்த்தனை தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கில், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு, நீதிபதி பிரியந்த லியனகே தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் (PTL) பணிப்பாளர்களான அர்ஜுன் அலோசியஸ், ஜெஃப்ரி அலோசியஸ், கசுன் பலிசேன உள்ளிட்டவர்களும், மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி. சமரசிறி, முத்துராஜா சுரேந்திரன், சித்த ரஞ்சன் ஹுல்லேகல்ல மற்றும் பி. குணவர்தன ஆகியோரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

எனினும், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜான் புஞ்சிஹேவா ஆகிய இரு பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், அவர்களின்றி வழக்கு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், வழக்குக்குத் தேவையான சில ஆவணங்கள் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்து, அடுத்த நீதிமன்றத் திகதிக்கு முன்னதாக எஞ்சியுள்ள அனைத்து ஆவணங்களையும் பிரதிவாதிகள் தரப்பிடம் ஒப்படைக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஒஸ்வால்ட் பெரேராவுக்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி ஏலத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு 688 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

கேப்பாபிலவு நிலமீட்புப் போராட்டக் கொட்டகைக்கு தீ வைப்பு – மர்ம நபர்கள் குறித்து விசாரணை கோரிக்கை

...

arvoshan.com

ABU மாநாட்டை நடத்துவதன் மூலம் ரூ.250 மில்லியன் பெறுமதியான விளம்பர வாய்ப்பு – இலங்கை சுற்றுலாத்துறை

...

arvoshan.com

மகா பருவத்துக்குத் தேவையான உரம் போதியளவில் கையிருப்பில் – தேசிய உரச் செயலகம் அறிவிப்பு

...

arvoshan.com

PickMe Food, Uber Eats சேவைகளை நம்பி அனைவராலும் வாழ முடியாது – எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கத்திடம் ஹர்ஷா கேள்வி

...

arvoshan.com

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களுக்கு எதிராக பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

...

arvoshan.com

33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு – நிதி அமைச்சு அறிவிப்பு

...

arvoshan.com

TIN சான்றிதழுக்காக வருமான வரி அலுவலகங்களுக்கு தேவையின்றி வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

...

arvoshan.com

ஓய்வுபெறும் முப்படையினருக்கு புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த திட்டம்

...

arvoshan.com

சபரகமுவ மாகாணத்தில் உயர்தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய 40 மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி!

...

arvoshan.com

தும்பர சிறைச்சாலையில் கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: புதிய தகவல்கள் வெளியாகின – உறவினர்கள் நீதிகோரி கோரிக்கை

...

arvoshan.com

கெக்கிராவையில் சட்டவிரோத துப்பாக்கிகள், வனவிலங்கு பொருட்களுடன் மூவர் கைது!

...

arvoshan.com

சவூதியில் இலங்கைப் பிரஜைக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்தானமை: ஜனாதிபதி அநுரவுக்கு மியன்மார் அமைப்பு பாராட்டு

...

arvoshan.com

யானைகளைப் பாதுகாக்கவும் – மனித - யானை மோதல்களைக் குறைக்கவும் நாடளாவிய நடவடிக்கை ஆரம்பம்!

...

arvoshan.com

மெல்பேர்ன் – கொழும்பு விமானத்தில் அவசரநிலை அறிவிப்பு: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விளக்கம்

...

arvoshan.com

ரூ. 79 இலட்சம் ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சின் செயலாளர் கைது!

...