1,540 கிராம நிலதாரி அதிகாரிகளுக்கு நாளை நியமனக் கடிதங்கள் வழங்கல்

arvloshan.com

புதிய கிராம நிலதாரி சேவைப் பிரமாணக் குறிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கிராம நிலதாரி சேவையின் III ஆம் தரத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட 1,540 அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் நாளை (8) காலை அலரி மாளிகையில் வழங்கி வைக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு குறித்து, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பேராசிரியர் சந்தன அபயரத்ன சிறப்பு ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வு குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்த நியமனங்கள் வழங்கப்படுவதன் மூலம் கிராம நிலதாரி சேவையில் நீண்டகாலமாக நிலவி வந்த பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காண சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்புகள் பல்வேறு செல்வாக்குகளுக்கு உட்பட்டிருந்தபோதிலும், தற்போதைய அரசாங்கம் பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் நேர்முகப் பரீட்சைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, திறமைக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையை மிகச் சரியாக நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த 1,540 பேரின் ஆட்சேர்ப்பு மூலம் கிராமப்புறங்களில் காணப்படும் கடுமையான அதிகாரி பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவதுடன், ஒரே கிராம நிலதாரி பல பிரிவுகளுக்குப் பொறுப்பாகச் செயற்பட வேண்டியிருந்த சவால்களுக்கும் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டில் மேலும் 1,500 க்கும் மேற்பட்ட அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான முதற்கட்ட ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் வருடாந்த வெற்றிடங்களைத் தவிர ஏனைய அனைத்து வெற்றிடங்களும் நிரப்பப்பட்டு, மக்களுக்குப் பலனுள்ள வகையில் திறமையான பொதுச் சேவை உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிராமங்களுக்கும் அரசிற்கும் இடையிலான முதன்மைப் பாலமாகத் திகழும் கிராம நிலதாரி சேவையின் நீண்டகால வரலாற்றை சுட்டிக்காட்டிய அமைச்சர், பல வருடங்களாகத் தாமதிக்கப்பட்ட சேவைப் பிரமாணக் குறிப்பை அறிமுகப்படுத்தியமை மற்றும் சீருடைப் படியை 5,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தியமை உட்படத் துறையில் தீர்க்கப்படாமல் இருந்த பல சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், தீர்க்கப்படாத ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூட்டினார். "வளமான நாடு, அழகான வாழ்க்கை" (A Thriving Nation, A Beautiful Life) எனும் தேசிய அபிவிருத்திப் கருப்பொருளின் கீழ் கிராமிய அபிவிருத்திக்கான முக்கிய பதவிகளை நிரப்ப முடிையுமிட்டு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த அமைச்சர், புதிய நியமனம் பெறும் அதிகாரிகளை அடிமட்டச் சமூகங்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த முழுமையான ஆட்சேர்ப்புச் செயற்பாடும் வெளிப்படைத் தன்மையுடனும் சட்டப்பூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதியிட்ட 2460 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

கொழும்பு கோட்டை நீதவான் கோசல சேனாடீர மீண்டும் சேவையில் இணைப்பு!

...

arvoshan.com

ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டமைக்கு மகாநாயக்க தேரர்கள் கடும் கவலை!

...

arvoshan.com

2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 211,666 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகப் பயணம்

...

arvoshan.com

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் பிணையில் விடுதலை!

...

arvoshan.com

ஷிராந்தி ராஜபக்ஷ அக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

...

arvoshan.com

கல்விச் சபையை அமைக்க ஓராண்டுக்குள் புதிய சட்டமூலம்: பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம வழக்கு முடியும் வரை விளக்கமறியலில்!

...

arvoshan.com

கைது செய்யப்பட்ட சிரந்தி ராஜபக்‌ஷ நீதிமன்றில் முன்னிலை

...

arvoshan.com

விமல், கம்மன்பில, திலீத் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு

...

arvoshan.com

பேங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 கிலோவுக்கும் அதிகமான 'குஷ்' போதைப்பொருளுடன் 24 வயது இளைஞர் கைது

...

arvoshan.com

சிராந்தி ராஜபக்‌ஷ கைது: லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை நிதி மோசடி விபரம் வெளியானது!

...

arvoshan.com

கட்டாய SLS தரச்சான்று இன்றி மின் உபகரணங்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 2 லட்சம் அபராதம்

...

arvoshan.com

வெலிகம துப்பாக்கிச்சூடு: தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 9 பேருக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு

...

arvoshan.com

சவூதி மரண தண்டனை வழக்கு: அனோஜன் தாக்கப்பட்டமை குறித்து அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்

...

arvoshan.com

சவூதி மன்னிப்பைச் சுட்டிக்காட்டி நாமல் சாடல்; ஞாணசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கக் கோரிக்கை

...